காவி உடையணிந்து சாமியார்கள் பலாத்காரம் செய்கிறார்கள்.. படத்தில் அணிந்தால் தவறா..? பிரகாஷ் ராஜ் காட்டம்
- சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஷாருக்கான், தீபிகா படுகோனே நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பதான்’.
- இப்படத்தின் பாடலில் ஷாருக்கானுடன் தீபிகா படுகோனே காவி உடையில் கவர்ச்சி நடனம் ஆடி இந்துக்கள் மனதை புண்படுத்தி விட்டதாக குற்றம் சாட்டப்பட்டு உள்ளது.
சித்தார்த் ஆனந்த் இயக்கிய 'பதான்' இந்தி படத்தில் ஷாருக்கான், தீபிகா படுகோனே ஜோடியாக நடித்துள்ளனர். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் பான் இந்தியா படமாக அடுத்த மாதம் திரைக்கு வருகிறது. இந்த படத்தில் நடிக்க தீபிகா படுகோனே ரூ.15 கோடி சம்பளம் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பதான்
சில தினங்களுக்கு முன்பு பதான் படத்தில் இடம்பெற்றுள்ள தீபிகா படுகோனேவின் கவர்ச்சி குத்தாட்ட பாடல் காட்சி வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. பாடலில் ஷாருக்கானுடன் தீபிகா படுகோனே காவி உடையில் கவர்ச்சி நடனம் ஆடி இந்துக்கள் மனதை புண்படுத்தி விட்டதாக குற்றம் சாட்டப்பட்டு உள்ளது.
வீர சிவாஜி அமைப்பை சேர்ந்தவர்கள் மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் பதான் படத்தை தடை செய்யும்படி கோஷமிட்டு தீபிகா படுகோனே, ஷாருக்கான் ஆகியோரின் கொடும்பாவியை எரித்து போராட்டத்தில் ஈடுபட்ட வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலானது. மேலும், மத்திய பிரதேச உள்துறை மந்திரி நரோத்தம் மிஸ்ரா பதான் படத்தின் பாடல் காட்சியில் இடம்பெற்றுள்ள உடை மற்றும் பாடல் வரிகளை நீக்க வேண்டும். இல்லையேல் படத்துக்கு அனுமதி வழங்குவது குறித்து யோசிக்க வேண்டிவரும் என்று கூறினார்.
பிரகாஷ் ராஜ்
இந்நிலையில், நடிகர் பிரகாஷ் ராஜ் 'பதான்' படத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பது குறித்து தனது சமூக வலைதளத்தில் " காவி உடை அணிந்து பெண்களை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்குகிறார்கள்; சில எம்.எல்.ஏக்கள் வெறுப்பு பிரச்சாரம் மேற்கொள்கிறார்கள்; காவி உடை அணிந்த சாமியார்கள் சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்கிறார்கள். அது பரவாயில்லை, ஒரு நடிகை படத்தில் காவி உடை அணிந்து வருவது தவறா " என்று காட்டமாக பதிவிட்டுள்ளார்.
#Besharam BIGOTS.. So it's okay when Saffron clad men garland rapists..give hate speech, broker MLAs, a Saffron clad swamiji rapes Minors, But not a DRESS in a film ?? #justasking
— Prakash Raj (@prakashraaj) December 15, 2022
….Protesters Burn Effigies Of SRK In Indore. Their Demand: Ban 'Pathaan' https://t.co/00Wa982IU4