சர்வதேச விருதுகளை குவிக்கும் ஆர்.ஆர்.ஆர்
- இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் வெளியாகி வசூலை குவித்த திரைப்படம் ‘ஆர்.ஆர்.ஆர்’.
- இப்படத்தின் 'நாட்டு நாட்டு' பாடல் கோல்டன் குளோப் விருதை வென்றது.
ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர். நடிப்பில் ராஜமௌலி இயக்கத்தில் வெளியான படம் 'ஆர்ஆர்ஆர்'. இப்படம் உலகம் முழுவதும் கடந்த மார்ச் 25-ஆம் தேதி வெளியானது. தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி மொழிகளில் வெளியான இப்படம் நல்ல விமர்சனங்கள் பெற்றது.
ஆர்.ஆர்.ஆர்
இப்படத்தில் பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கான், ஆலியா பட், பிரகாஷ் ராஜ், சமுத்திரகனி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பீம் கதாபாத்திரத்தில் ஜூனியர் என்.டி.ஆரும் ராம ராஜு கதாபாத்திரத்தில் ராம் சரணும் நடித்திருந்தனர். இப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வசூலை குவித்தது.
ஆர்.ஆர்.ஆர்
சமீபத்தில் ஒரிஜினல் பாடல் பிரிவில் இப்படத்தின் 'நாட்டு நாட்டு' பாடல் கோல்டன் குளோப் விருதை வென்றது. இந்நிலையில், அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடந்த 'கிரிட்டிக்ஸ் சாய்ஸ் அவார்டு' விழாவில் சிறந்த வெளிநாட்டு திரைப்படம், சிறந்த பாடல் ஆகிய பிரிவுகளில் 2 சர்வதேச விருதுகளை இப்படம் வென்றுள்ளது.
ஆர்.ஆர்.ஆர்
மேலும், 'ஆர்ஆர்ஆர்' திரைப்படம் தொடர்ந்து சர்வதேச விருதுகளை வென்று வரும் நிலையில் ஆஸ்கார் போட்டியில் வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.