சினிமா செய்திகள்

விடுதலை

விடுதலை திரைப்பட விபத்து குறித்து தயாரிப்பு நிறுவனம் அறிக்கை வெளியீடு

Published On 2022-12-06 04:23 GMT   |   Update On 2022-12-06 04:23 GMT
  • இயக்குனர் வெற்றிமாறன் சூரி, விஜய் சேதுபதி நடிக்கும் விடுதலை படத்தை இயக்கி வருகிறார்.
  • இப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் ரோப் கயிறு அறுந்து விழுந்த சுரேஷ் என்ற சண்டை கலைஞர் உயிர்ழிந்தார்.

வெற்றிமாறன், தற்போது சூரி கதாநாயகனாக நடிக்கும் 'விடுதலை' படத்தை இயக்கி வருகிறார். எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன் என்கிற சிறுகதையை மையமாக வைத்து இப்படம் உருவாகி வருகிறது. விஜய் சேதுபதி இப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இளையராஜா இசையமைக்கும் இப்படத்தை ஆர்.எஸ் இன்ஃபோடெயின்மென்ட் சார்பில் எல்ரெட் குமார் தயாரிக்கிறார்.

 

விடுதலை

இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த 3-ம் தேதி சென்னை கேளம்பாக்கத்தில் நடைபெற்ற படப்பிடிப்பின்போது ரோப் கயிறு அறுந்து விழுந்து சுரேஷ் என்ற சண்டை கலைஞர் உயிரிழந்தார். ரோப் கயிறு அறுந்து கீழே விழுந்ததில் படுகாயமடைந்த சண்டை பயிற்சியாளர் சுரேஷ் சம்பவ இடத்திலேயே உயிரழந்தார். இவரின் இறப்பு பலரையும் சோகத்தில் ஆழ்த்தியது.

 

விடுதலை

இந்த விபத்து குறித்து விடுதலை பட தயாரிப்பு நிறுவனம் ஆர்எஸ் இன்ஃபோடெயின்மென்ட் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், சண்டை கலைஞர் சுரேஷ் 'விடுதலை' படப்பிடிப்பின் போது ஏற்பட்ட விபத்தில் சிக்கி உயிரிழந்தது மிகப்பெரிய வருத்தத்தையும், வலியையும் ஏற்படுத்தியுள்ளது. படப்பிடிப்பு தளத்தில் பணியாளர்களின் பாதுகாப்பிற்காக, ஆம்புலன்ஸ் உள்ளிட்ட முதலுதவி சிகிச்சை போன்ற முன்னெச்சரிக்கைகள் நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட போதிலும், சுரேஷை காப்பாற்ற முடியாதது மிகப்பெரிய இழப்பு.

 

பட தயாரிப்பு நிறுவனம் அறிக்கை

இந்த சம்பவம் எங்களது இதயத்தில் மாறாத வலியை ஏற்படுத்தியுள்ளது. மறைந்த சண்டை கலைஞர் சுரேஷ் மற்றும் அவருடைய குடும்பத்திற்கு இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags:    

Similar News