null
பட தோல்வியால் சம்பளம் வாங்க மறுத்த சம்யுக்தா.. தயாரிப்பாளர் நெகிழ்ச்சி..
- சமீபத்தில் வெளியான 'வாத்தி' திரைப்படத்தில் நடிகை சம்யுக்தா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
- இப்படம் உலக அளவில் ரூ.75 கோடியை வசூலித்துள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.
மலையாள திரையுலகின் முன்னணி நடிகையான சம்யுக்தா தமிழில் களரி, ஜூலை காற்றில் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.சமீபத்தில் வெங்கி அட்லூரி இயக்கத்தில், தனுஷ் நடித்த 'வாத்தி' திரைப்படத்தில் நடித்திருந்தார். இப்படம் உலக அளவில் ரூ.75 கோடியை வசூலித்துள்ளதாக படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்திருந்தது.
சம்யுக்தா
இந்நிலையில், நடிகை சம்யுக்தாவை மலையாள தயாரிப்பாளர் சாண்ட்ரா தாமஸ் புகழ்ந்துள்ளார். அவர் கூறியதாவது, "நான் தயாரித்த 'எடக்காடு பட்டாலியன்' படத்தில் நடித்ததற்காக சம்யுக்தாவுக்கு 65 சதவிகித சம்பளத்தைதான் கொடுத்தேன். படம் ரிலீஸ் ஆகி வரவேற்பைப் பெறவில்லை. பாக்கி ஊதியத்தைக் கொடுக்க முயன்றபோது அவர் வாங்க மறுத்துவிட்டார்.
முழு ஊதியமும் தரவில்லை என்றால் டப்பிங் பேசவும் படத்தின் புரமோஷனுக்கும் வர மறுக்கும் நடிகர்களுக்கு மத்தியில் சம்யுக்தா ஒரு பாடப்புத்தகம் போன்றவர். வருடத்துக்கு 300 படங்களுக்கு மேல் தயாராகும் மலையாள சினிமாவில் 5 சதவிகித படங்கள் மட்டுமே வெற்றி பெறுகின்றன. இந்த நிலையில் சம்யுக்தா போன்றவர்கள் தயாரிப்பாளர்களுக்குத் தேவை என்பதை என் அனுபவத்தில் சொல்கிறேன்" இவ்வாறு சாண்ட்ரா தாமஸ் கூறியுள்ளார்.