கலாபூர்வமான ஒரு நன்மை 'விடுதலை' படத்தில் இருக்கிறது -சீனுராமசாமி
- இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘விடுதலை’.
- இப்படத்தை பார்த்த பிரபலங்கள் பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி, பவானி ஸ்ரீ, சேத்தன், கவுதம் மேனன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி கடந்த மார்ச் 31-ந்தேதி திரையரங்குகளில் வெளியான படம் 'விடுதலை-1'. இப்படம் விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன் என்கிற சிறுகதையை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். இப்படத்திற்கு ரஜினி உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், 'விடுதலை' திரைப்படத்தை பார்த்த இயக்குனர் சீனுராமசாமி படக்குழுவை பாராட்டி சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "ஒரு திரைப்படம் கவனம் பெறுவதில் வணிகம் தாண்டி கலாபூர்வமான ஒரு நன்மை இருக்கிறது. அந்த நன்மை என்பதுதான் இங்கு சிறப்பானது. அது நண்பர் வெற்றிமாறன் இயக்கிய விடுதலை படத்தில் நிகழ்ந்திருக்கிறது. அது தம்பி சூரியை சிறந்த நடிகனாக, நாயகனாக தந்திருக்கிறது. வாழ்த்துகள்" என்று பதிவிட்டுள்ளார்.
ஒரு திரைப்படம் கவனம் பெறுவதில்
— Seenu Ramasamy (@seenuramasamy) April 15, 2023
வணிகம் தாண்டி கலாபூர்வமான
ஒரு நன்மை இருக்கிறது.
அந்த நன்மை என்பதுதான் இங்கு சிறப்பானது.
அது நண்பர்
வெற்றிமாறன் இயக்கிய விடுதலை படத்தில் நிகழ்ந்திருக்கிறது
அது தம்பி@sooriofficial -யை
சிறந்த நடிகனாக, நாயகனாக தந்திருக்கிறது.
வாழ்த்துகள்.
? ❤️ pic.twitter.com/SYImfcYsDj