null
மனீஷா நஷ்ட ஈடாக ஒரு லட்சம் பெற்றாரே ஏன்..? சீனுராமசாமி பரபரப்பு கேள்வி
- சீனு ராமசாமியுடன் இணைந்து பணியாற்ற மாட்டேன் என்று நடிகை மனீஷா தெரிவித்துள்ளார்.
- என்னை மரியாதை குறைவாக நடத்திய ஒருவருடன் நான் ஏன் பணியாற்ற வேண்டும்?
திரையுலகில் நடிகைகள் பாலியல் ரீதியிலான தொந்தரவுகளை எதிர்கொண்டது பற்றி பல பிரபலங்கள் வெளிப்படையாக கருத்துக்களை பகிர்ந்துள்ளனர். சமீபத்தில் பத்திரிகையாளர் ஒருவர், தமிழ் சினிமா இயக்குனர் சீனு ராமசாமி நடிகை மனிஷா யாதவுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றம்சாட்டினார். இந்த தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், நடிகை மனிஷா யாதவ் தனக்கு நன்றி தெரிவித்த வீடியோ ஒன்றை தனது சமூக வலைதளத்தில் பதிவிட்ட இயக்குனர் சீனு ராமசாமி, மனிஷா யாதவ் தன் படத்தில் நடிப்பார் என்றும் குறிப்பிட்டு இருந்தார்.
இதையடுத்து நடிகை மனிஷா யாதவ் இனி சீனு ராமசாமியுடன் இணைந்து பணியாற்ற மாட்டேன் என்று தனது இன்ஸ்டாகிராம் தளத்தில் பதிவிட்டிருந்தார். அதில், "சீனு ராமசாமியின் படத்தில் நான் நடிக்கிறேனா? இதனை இப்போது தான் முதல் முறையாக கேட்கிறேன். விழா மேடையில் இருந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்தை போன்று தான் அவருக்கும் நான் நன்றி தெரிவித்தேன். இது எதையும் மாற்றிவிடாது.
ஒன்பது ஆண்டுகளுக்கு முன் நான் கூறிய கருத்தில் இன்றும் உறுதியாகவே இருக்கிறேன். என்னை மரியாதை குறைவாக நடத்திய ஒருவருடன் நான் ஏன் பணியாற்ற வேண்டும்? சீனு ராமசாமி சார், நீங்கள் கூறும் கருத்துகளில் உண்மை இருப்பதை உறுதிப்படுத்துக் கொள்ளுங்கள்," என்று தெரிவித்தார்.
இந்நிலையில், இயக்குனர் சீனுராமசாமி நடிகை மனிஷாவிடம் பல கேள்விகளை எழுப்பியுள்ளார். இது குறித்து அவர் தனது சமூக வலைதளத்தில், "சில கேள்விகள் flash back
1) இடம் பொருள் ஏவல்
படப்பிடிப்பிற்கு வந்த முதல் நாள்
ஏன் முதல் ஷாட்டில் 28 டேக் வாங்கினார் மணிஷா,
2) படப்பிடிப்பு தளத்தில்
உதவிட வந்த மூத்த நடிகையர் வடிவுக்கரசி அவர்களிடம் கோபித்து கடுஞ்சொல் வீசினாரே ஏன்?
3) விஷ்ணு விஷால் ஜோடியாக நடியுங்கள் என நானும் அண்ணாமலை பீலிம்ஸ் கணேஷ் அவர்களும் கேட்ட பொழுது
ஏன் மறுத்தார் ?
4) என் சம்பளத்தில் ஒரு
லட்சம் நஷ்ட ஈடாக பெற்றாரே ஏன்..?
5) மூன்று நாட்கள் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தந்த ஹோட்டலில்
தன் தயாருடன் தங்கிருந்த மனிஷா அவர்களை கடைசி
ஒரு நாள் காலையில் படப்பிடிப்பில் சந்தித்தேன்.
6) அந்த 28 டேக் மேக்கிங் வீடியோவுக்கு காத்திருக்கிறேன்.
தெய்வம் அருளனும்
இருப்பினும் உங்களோடு திரும்ப பணி புரிய விரும்பினேன்" என்று பதிவிட்டுள்ளார்.