இந்திய அரசியலமைப்பு குறித்து சுஷ்மிதா சென் பதிவு வைரல்
- உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் பிரம்மாண்டமாக ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது.
- இதன் கும்பாபிஷேக விழாவில் பலர் கலந்து கொண்டனர்.
கடந்த 2019-ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்பின் மூலம் அயோத்தி சர்ச்சையானது முடிவுக்கு கொண்டு வரப்பட்டது. இதையடுத்து உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலில் நேற்று கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடைபெற்றது.
சுஷ்மிதா சென் பதிவு
இந்த விழாவில், பிரபலங்கள் அமிதாப் பச்சன், ரஜினிகாந்த், சச்சின் டெண்டுல்கர் மற்றும் பலர் கலந்து கொண்டனர். ராமர் கோவில் திறப்புக்கு ஆதரவாக பல நடிகர்கள் கருத்து தெரிவித்து வந்தாலும், மதச்சார்பற்ற நாட்டில் மசூதியை இடித்துவிட்டு கோவிலை கட்டுவது சரியா என பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
பார்வதி பதிவு
இந்நிலையில், பாலிவுட் நடிகை சுஷ்மிதா சென் தனது சமூக வலைதளத்தில் இந்திய அரசியல் சாசனத்தின் முகப்பு பக்கத்தை பகிர்ந்துள்ளார். அப்பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதற்கு முன்பு நடிகை பார்வதி தனது சமூக வலைதளப் பக்கத்தில் இந்திய அரசியல் சாசனத்தின் முகப்பு பக்கத்தைப் பதிவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.