null
மக்களோட அறியாமையை போக்குவதற்காக எடுக்கப்பட்ட படம் கிடையாது.. நடிகர் சித்தார்த் பிரத்யேக பேட்டி
- சித்தார்த் நடிப்பில் உருவாகியுள்ள 'டக்கர்' திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியானது.
- இப்படம் குறித்து டக்கர் படக்குழு மாலைமலர் நேர்யர்களுக்காக பிரத்யேக பேட்டியளித்தனர்.
கார்த்திக் ஜி கிரிஷ் இயக்கத்தில் சித்தார்த் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'டக்கர்'. இதில் சித்தார்த்துக்கு ஜோடியாக நடிகை திவ்யான்ஷா கௌஷிக் நடித்துள்ளார். மேலும் யோகிபாபு, அபிமன்யூ சிங், முனிஷ்காந்த், ஆர்ஜே விக்னேஷ்காந்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பேஷன் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ள இந்த படத்திற்கு நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ளார்.
'டக்கர்' திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. டக்கர் படத்திற்காக நடிகர் சித்தார்த், இயக்குனர் கார்த்திக் ஜி கிரிஷ், இசையமைப்பாளர் நிவாஸ் கே பிரசன்னா ஆகியோர் மாலைமலர் நேயர்களுக்காக பிரத்யேக பேட்டியளித்து பல விஷயங்களை பகிர்ந்துகொண்டனர்.
அப்பொழுது நடிகர் சித்தார்த் பேசியதாவது, "இந்த படம் தியேட்டர்ல பார்ப்பதற்காக எடுக்கப்பட்ட படம். இது ஜனரஞ்சகமான கமர்ஷியல் படம். ஒரு சில படங்களில் மக்கள் இந்த கருத்தை ஏற்று கொள்வார்களா? இதில் பேசியிருக்கும் நீதி அநீதியை ஏற்று கொள்வார்களா? என்ற எண்ணம் இருக்கும். டக்கர் படம் மக்களோட அறியாமையை போக்குவதற்காக எடுக்கப்பட்ட படம் கிடையாது, நல்ல மனிதனை தூண்டி வெளியே கொண்டு வரும் நோக்கம் கிடையாது. ஜாலியாக படத்தை வந்து தியேட்டர்ல சந்தோஷமாக பார்ப்பதற்காக எடுக்கப்பட்ட படம். எனவே அனைவரும் டக்கர் படத்தை தியேட்டர்ல வந்து பாருங்கள்" என்றார்.