ஆஸ்கர் பட்டியலில் இடம் பிடித்த 'தி காஷ்மீர் பைல்ஸ்'.. வைரலாகும் இயக்குனர் பதிவு..
- இயக்குனர் விவேக் அக்னிஹோத்ரி இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் ‘தி காஷ்மீர் பைல்ஸ்’.
- சிறந்த படத்திற்கான பரிசீலனைக்காக தேர்வு செய்யப்பட்ட 301 படங்களில் 'தி காஷ்மீர் பைல்ஸ்' இடம்பிடித்துள்ளது.
இயக்குனர் விவேக் அக்னிஹோத்ரி இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் 'தி காஷ்மீர் பைல்ஸ்'. 1990-களில் காஷ்மீர் பகுதியில் நடைபெற்ற உண்மை சம்பவத்தை தழுவி எடுக்கப்பட்ட இந்த திரைப்படத்திற்கு சில மாநிலங்களில் வரி விலக்கும் கொடுக்கப்பட்டு இருந்தது. இப்படம் மொத்தமாக ரூ.340 கோடியை வசூல் செய்ததாக கூறப்பட்டது.
விவேக் அக்னிஹோத்ரி
இந்நிலையில், 95-வது ஆஸ்கர் விருதுகளில் சிறந்த படத்தின் பரிசீலனைக்காக தேர்வு செய்யப்பட்ட 301 படங்களில் இந்தியத் திரைப்படமான 'தி காஷ்மீர் பைல்ஸ்' இடம்பிடித்துள்ளது. இந்தப் பட்டியலில் மேலும் நான்கு இந்தியப் படங்களும் இடம்பெற்றுள்ளன. இதனை தனது சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ள இயக்குனர் விவேக் அக்னிஹோத்ரி, இந்திய சினிமாவுக்கு இது ஒரு பெரிய செய்தி என்று பதிவிட்டுள்ளார்.
விவேக் அக்னிஹோத்ரி
மேலும், பல்லவி ஜோஷி, அனுபம் கேர், மிதுன் சக்ரவர்த்தி மற்றும் தர்ஷன் குமார் ஆகியோர் 'சிறந்த நடிகர்' விருதுகளுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
BIG ANNOUNCEMENT: #TheKashmirFiles has been shortlisted for #Oscars2023 in the first list of @TheAcademy. It's one of the 5 films from India. I wish all of them very best. A great year for Indian cinema. ???
— Vivek Ranjan Agnihotri (@vivekagnihotri) January 10, 2023