எதிர்ப்புகளுக்கு மத்தியில் ரூ.200 கோடி வசூல்.. தி கேரளா ஸ்டோரி படைத்த முதல் சாதனை
- 'தி கேரளா ஸ்டோரி' திரைப்படம் கோர்ட்டு உத்தரவுப்படி கேரளா, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் வெளியானது.
- இப்படத்தை பார்த்து பலரும் பல்வேறு விதமான கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
விபுல்ஷா தயாரிப்பில் இயக்குனர் சுதிப்டோ சென் இயக்கத்தில் அதா சர்மா, சித்தி இட்னானி உட்பட பலர் நடித்துள்ள படம், 'தி கேரளா ஸ்டோரி'. கடந்த 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம் கேரளாவை சேர்ந்த 32,000 இந்து இளம் பெண்களை மூளைச்சலவை செய்து மதம் மாற்றி ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தில் சேர்த்ததாக சித்தரித்து எடுக்கப்பட்டுள்ளது.
இந்த திரைப்படத்திற்கு கேரளா, தமிழ்நாடு, மேற்கு வங்காளம் உள்ளிட்ட பல மாநிலங்களில் எதிர்ப்பு கிளம்பியது, என்றாலும் கோர்ட்டு உத்தரவுப்படி இந்த படம் கேரளா, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் வெளியானது. படத்தை பார்த்து பலரும் பல்வேறு விதமான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், தி கேரளா ஸ்டோரி வசூல் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, இப்படம் தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்காளம் மாநிலத்தை தவிர்த்து ரூ.200 கோடி வசூலித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பெண்களை மையப்படுத்தி வெளியான முதல் திரைப்படம் ரூ.200 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.