சினிமா செய்திகள்

துணிவு

null

கதாபாத்திரங்களை அறிமுகப்படுத்தும் 'துணிவு' படக்குழு

Published On 2022-12-30 05:59 GMT   |   Update On 2022-12-30 06:48 GMT
  • 'துணிவு' திரைப்படம் வருகிற பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
  • இப்படத்தின் மூன்று பாடல்கள் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் 'துணிவு'. இந்த படத்தில் மஞ்சுவாரியர், சமுத்திரக்கனி, ஜி.எம்.சுந்தர், மகாநதி சங்கர், ஜான் கொக்கன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். போனி கபூர் தயாரித்துள்ள இந்த படத்தின் தமிழ்நாடு வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் பெற்றுள்ளது.


துணிவு

'துணிவு' திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகவுள்ளது. சமீபத்தில் 'துணிவு' படத்தின் 'சில்லா சில்லா', காசேதான் கடவுளடா', 'கேங்ஸ்டா'ஆகிய பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், 'துணிவு' படக்குழு கதாபாத்திரங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.


துணிவு போஸ்டர்

அதன்படி, இந்த படத்தில் நடிகர் பிரேம், பிரேம் என்ற கதாபாத்திரத்திலும் பட்டிமன்ற பேச்சாளர் மோகன சுந்தரம் , மைபா என்ற கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். இதனை படக்குழு போஸ்டர்களை வெளியிட்டு அறிவித்துள்ளது.



Tags:    

Similar News