null
லவ் டுடே திரைப்படம் இந்தியில் ரீமேக்.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்
- பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் உருவான திரைப்படம் 'லவ் டுடே'.
- இப்படத்தை தற்போது இந்தி மொழியில் ரீமேக் செய்ய திட்டமிட்ட்டு வருவதாக கூறப்படுகிறது.
கோமாளி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான பிரதீப் ரங்கநாதன், அடுத்ததாக அவரே இயக்கி நடித்த 'லவ் டுடே' திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதில் இவானா, சத்யராஜ், ராதிகா, யோகி பாபு, ரவீனா மற்றும் ஆதித்யா கதிர் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். சுமார் ரூ.4 கோடி பட்ஜெட்டில் தயாரான இந்த படம் தியேட்டர்கள் மூலம் மட்டுமே ரூ.70 கோடிக்கு மேல் வசூலித்து இருப்பதாகவும் மேலும் ஓ.டி.டி. உரிமை மூலமும் பெரிய தொகை வந்ததாகவும் தகவல் வெளியானது. இப்படத்தை தெலுங்கில் டப் செய்து படக்குழு வெளியிட்டது.
இந்நிலையில் 'லவ் டுடே' படத்தை இந்தியிலும் ரீமேக் செய்ய உள்ளனர். இந்தி பதிப்பில் கதாநாயகனாக நடிக்க வருண் தவான் பெயர் அடிபடுகிறது. இந்தி பதிப்பையும் பிரதீப் ரங்கநாதனே இயக்க பேச்சுவார்த்தை நடக்கிறது. ஏற்கனவே தமிழில் வெற்றி பெற்ற பல படங்கள் இந்தியில் ரீமேக் ஆகி உள்ளன. சூர்யா நடித்த சூரரை போற்று படமும் இந்தியில் ரீமேக் ஆகி வருவது குறிப்பிடத்தக்கது.