விஜய் போட்ட உத்தரவு.. 234 தொகுதிகளிலும் நடைபெறும் ஏற்பாடு
- உலகம் முழுவதும் மே 28-ஆம் தேதி 'உலக பட்டினி தினம்’ அனுசரிக்கப்படுகிறது.
- பட்டினியில் வாடும் மக்களை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த இந்த தினமானது ஆண்டு தோறும் அனுசரிக்கப்படுகிறது.
உலகம் முழுவதும் மே 28-ஆம் தேதி 'உலக பட்டினி தினம்' அனுசரிக்கப்படுகிறது. உலகம் முழுவதும் இருக்கக்கூடிய நீண்ட நாள் பட்டினியில் வாடும் மக்களை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத்தோடு இந்த தினமானது ஆண்டு தோறும் அனுசரிக்கப்படுகிறது.
விஜய்
நடிகர் விஜய்யின் உத்தரவுபடி இந்த ஆண்டு உலக பட்டினி தினத்தை முன்னிட்டு பசி என்னும் பிணி போக்கிடும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விஜய் மக்கள் இயக்கம் சார்பாக விஜய் ஒரு நாள் மதிய உணவு சேவையகம் என்ற திட்டம் மூலம் வருகிற ஞாயிற்றுக்கிழமை (மே 28) மதியம் 11 மணி அளவில் தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளில் உள்ள நகரம், ஒன்றியம், பகுதியில் உள்ள அனைத்து ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் ஒரு நாள் மதிய உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
விஜய் மக்கள் இயக்கம் அறிக்கை
இந்த திட்டமானது தமிழகம் , புதுச்சேரி, ஆந்திரா, கேரளா, கர்நாடகா மற்றும் மகராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள விஜய் மக்கள் இயக்கம் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் பட்டினியால் வாடும் மக்களுக்கு இயன்ற வரை உணவளித்து பசியினை போக்கும் விழிப்புணர்வை சமுதாயத்தில் ஏற்படுத்தும் விதமாக விஜய் மக்கள் இயக்கம் செயல்படுத்துகிறது என்று விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
விஜய்யின் மக்கள் இயக்கம் சார்பாக விலையில்லா உணவகம் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.