சினிமா செய்திகள்

கமல்ஹாசன்

புதிய நடிகர்களிடம் என்னை விட சிறப்பாக என்ன இருக்கிறது - நடிகர் கமல்ஹாசன்

Published On 2022-09-16 13:36 GMT   |   Update On 2022-09-16 13:36 GMT
  • இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அண்மையில் வெளியான திரைப்படம் ‘விக்ரம்’.
  • இப்படத்தில் திரைப்பிரபலங்கள் பலர் நடித்த்துள்ளனர்.

மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் படங்களை இயக்கி தமிழ் சினிமாவில் தனக்கான இடத்தை பிடித்தவர் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கத்தில் கமல்ஹாசன் கதாநாயகனாக நடிக்க விஜய் சேதுபதி, பகத் பாசில், நரேன், சூர்யா உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த 'விக்ரம்' திரைப்படம் தமிழ், தெலுங்கு, என பல மொழிகளில் அண்மையில் வெளியாகி ரூ.400 கோடிக்கும் மேல் வசூல் சாதனை படைத்தது.


விக்ரம்

'விக்ரம்' திரைப்படம் ஓடிடி-யில் வெளியாகி சாதனை படைத்திருந்தாலும் தற்போது வரை சில திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில், 'விக்ரம்' திரைப்படம் 100-வது நாளை கடந்துள்ளது. இதையடுத்து, இப்படத்தின் 100-வது நாள் கொண்டாட்டம் கோவையில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் நடிகர் கமல்ஹாசன் கலந்து கொண்டு கூறியதாவது, "சினிமாவில் நான் தொடக்க காலத்தில் 4 படங்கள் நடித்தும் என்னை யாரும் கண்டுகொள்ளவில்லை. அதை மாற்ற நன்றாக உழைத்தேன். அதனால்தான் இந்த அளவுக்கு உயர்ந்து இருக்கிறேன்.


விக்ரம்

நல்ல சினிமாவை கைவிட்டு விடாதீர்கள். புதிதாக வரும் நடிகர்களிடம் என்னை விட சிறப்பாக என்ன இருக்கிறது என்பதை கவனிப்பேன். பல சமயங்களில் அது இருக்கிறது என்பதை உணர்ந்து நான் அவை அடக்கம் கொள்வேன். அதனால் தான் என் ஆயுளை நீட்டிக் கொண்டு வருகிறீர்கள். இந்த வாழ்த்தை தொடர்ந்து எனக்கு நீங்கள் கொடுக்க வேண்டும்" என்று கூறினார்.

Tags:    

Similar News