சொப்பனத்தில் கூட யோசிக்கல- விநாயகன் நெகிழ்ச்சி
- ரஜினி நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ‘ஜெயிலர்’.
- இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தயாரிப்பு நிறுவனம் ரஜினி, நெல்சன் மற்றும் அனிருத் ஆகியோருக்கு காரை பரிசாக வழங்கியது.
ரஜினிகாந்த நடிப்பில் நெல்சன் இயக்கிய திரைப்படம் ஜெயிலர். ஆகஸ்ட் 10-ம் தேதி வெளியான ஜெயிலர் திரைப்படம் விமர்சன ரீதியிலும், வர்த்தக ரீதியிலும் அமோக வரவேற்பை பெற்றது. இதுவரை இந்த படம் ரூ. 525 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து இருப்பதாக படத்தை தயாரித்த சன் பிக்சர்ஸ் நிறுவனம் தெரிவித்திருந்தது. இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தயாரிப்பு நிறுவனம் ரஜினி, நெல்சன் மற்றும் அனிருத் ஆகியோருக்கு காரை பரிசாக வழங்கியது.
இந்நிலையில், 'ஜெயிலர்' திரைப்படத்தில் நடித்தது குறித்து நடிகர் விநாயகன் நெகிழ்ச்சியாக பேசியுள்ளார். இது தொடர்பாக தயாரிப்பு நிறுவனம் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், "நான் 15 நாட்களாக ஒரு வனப்பகுதியில் இருந்தேன். அங்கிருந்து திரும்பி ஊருக்கு வரும்போது எண்ணற்ற மிஸ்டு கால் வந்துட்டே இருந்தது. அப்போது, புரொடக்ஷன் சைடில் இருந்து போன் வந்தது. ரஜினி சார் படத்தில் நடிக்கணும், நெல்சன் இயக்குனருனு. ரஜினி சார் படம்னு சொன்னவுடன் கதை கேட்கணும் அவசியம் இல்ல. ஓகேன்னு சொல்லிட்டேன். இருந்தாலும், நெல்சன் பேசுனாரு, கேரக்டருடைய ஸ்ட்ரெக்சர் இதுதான் சொன்னார். நீங்க தான் முக்கியமான வில்லன்னு சொன்னார். அப்படி தான் படத்தில் வந்தேன்.
அந்த வர்மன் கேரக்டர், நல்ல வந்ததுக்கு முக்கியக்காரணம் ரஜினிசார் தான். சொப்பனத்தில் கூட யோசிக்கலன்னு படத்தில் ஒரு டயலாக் வரும் அப்படி ஒரு பாப்புலாரிட்டிதான் இப்போ எனக்கு கிடைச்சிருக்கு. படத்தில் நடிக்கும்போதும், மிக சந்தோஷமாகத் தான் நடித்தேன். நெல்சன் ரொம்ப நன்றிப்பா, ரஜினிசார் மறக்கமாட்டேன். கலாநிதி மாறன் சாருக்கு ரொம்ப நன்றி" என்று பேசினார்.