தமிழ்நாட்டிற்கு நிச்சயம் மாற்றம் தேவை - விஷால்
- தமிழ்நாட்டிற்கு நிச்சயம் மாற்றம் தேவை. 2026-ல் மற்றவர்கள் வருவதற்கு ஏன் வழி கொடுக்கிறீர்கள்.
- தேர்தலில் நான் சைக்கிளில் சென்று வாக்களித்தற்கு காரணம், என்னிடம் வண்டியில்லை.
நடிகர் விஷால் தற்போது 'ரத்னம்' என்ற ஆக்ஷன் படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை பிரபல இயக்குனர் ஹரி இயக்கி உள்ளார். அவரது இயக்கத்தில் 3- வது முறையாக விஷால் இதில் இணைந்து உள்ளார். இது விஷாலுக்கு 34- வது படமாகும்.
இந்த படத்தில் நடிகை பிரியா பவானி ஷங்கர், யோகி பாபு, சமுத்திரக்கனி, கௌதம் மேனன், நடித்து உள்ளனர். கார்த்திக் சுப்புராஜ் இந்த படத்தை தயாரித்து உள்ளார். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.
இப்படம் வருகிற 26- ந்தேதி தியேட்டர்களில் 'ரிலீஸ்' செய்யப்பட உள்ளது. இந்த நிலையில் "ரத்னம்" பட பிரமோஷன் பணிகளில் விஷால் ஈடுபட்டு உள்ளார். சேலத்தில் நடந்த நிகழ்ச்சியில் விஷால் கூறியதாவது :-
பாராளுமன்ற தேர்தலில் நான் சைக்கிளில் சென்று வாக்களித்தற்கு காரணம், விஜய்யின் இன்ஸ்பிரேஷன் என சொல்ல முடியாது. என்னிடம் வண்டியில்லை. அப்பா, அம்மாவிடம் வண்டி உள்ளது. என்னுடைய வண்டியை விற்றுவிட்டேன்.
நடிகர் விஜய்யை பொறுத்தவரை அவரது தன்னம்பிக்கை பிடிக்கும். இன்றைக்கு இருக்கும் ரோடு கண்டிஷன் மோசமாக உள்ளது.
'டிராபிக் ஜாம்' இல்லாமல் சீக்கிரம் சென்றுவிடலாம் என்பதற்காக சைக்கிளில் சென்றேன் தமிழ்நாட்டிற்கு நிச்சயம் மாற்றம் தேவை. 2026-ல் மற்றவர்கள் வருவதற்கு ஏன் வழி கொடுக்கிறீர்கள்.
எல்லோரும் நல்லது செய்யவே அரசியலுக்கு வருகின்றனர்.நீங்கள் நல்லது செய்துவிட்டால் நாங்கள் ஏன் எங்கள் தொழிலை விட்டு அரசியலுக்கு வருகிறோம்.
தமிழ்நாட்டிற்கு மாற்றம் என்பது நிச்சயம் தேவைப்படுகிறது. மக்களுக்கான தேவைகளை பூர்த்தி செய்தால், என்னைப் போன்ற வாக்காளர்கள் வாக்களித்துவிட்டு எங்கள் தொழிலை பார்த்துக் கொண்டு சென்று விடுவோம்.
திமுகவாக இருந்தாலும், அதிமுகவாக இருந்தாலும் நீங்கள் செய்ய வேண்டியது மக்கள் நலப்பணிகள். மக்களுக்கு ஏதாவது என்றால் அரசு மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும். எம்எல்ஏ, எம்.பிக்க்கள் மட்டும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார்கள். என்ன கொடுமை இது? "என்றார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.