எதை எதையோ எடுக்குறீங்க.. ஆயிரத்தில் ஒருவன் 2-வும் எடுங்க.. இயக்குநர் மோகன் ஜி
- வழக்கத்திற்கு மாறான கதைசொல்லல் மற்றும் காட்சி அமைப்புகளுக்காக இன்னும் பலரின் பாராட்டுக்களை பெற்றது.
- ‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்தின் இரண்டாம் பாகத்தை எப்போது வெளியிட போகிறீர்கள் என்று சமூக வலைத்தளங்களில் கேள்வி எழுப்பட்டு வருகிறது.
கடந்த 2010-ம் ஆண்டு வெளிவந்த படம் 'ஆயிரத்தில் ஒருவன்'. செல்வராகவன் இயக்கத்தில் கார்த்தி, ஆண்ட்ரியா ஜெர்மியா, ரீமாசென், பார்த்திபன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இத்திரைப்படத்துக்கு ஜி. வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.
'ஆயிரத்தில் ஒருவன்' படம், நிகழ்காலத்தை வரலாற்றுப் புனைகதைகளை புகுத்தி கற்பனைக் கூறுகளுடன் அமைந்திருந்தது. இது வழக்கத்திற்கு மாறான கதைசொல்லல் மற்றும் காட்சி அமைப்புகளுக்காக இன்னும் பலரின் பாராட்டுக்களை பெற்றது.
இந்த நிலையில், இந்தியன்-2, பாகுபலி-2, பொன்னியின் செல்வன்-2, அரண்மனை-4, சிங்கம்-3 போன்ற படங்கள் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ள நிலையில், 'ஆயிரத்தில் ஒருவன்' படத்தின் இரண்டாம் பாகத்தை எப்போது வெளியிட போகிறீர்கள் என்று சமூக வலைத்தளங்களில் கேள்வி எழுப்பட்டு வருகிறது.
இதனிடையே, 'பகாசுரன்' படத்தை இயக்கிய மோகன் ஜி எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், கண்ட கண்ட கதையை எல்லாம் படமாக்கும் பெரிய தயாரிப்பு நிறுவனங்கள், 'ஆயிரத்தில் ஒருவன்' படத்தின் இரண்டாம் பாகத்தை தயாரித்து வெளியிடுங்கள்.. இன்னும் இந்த படத்திற்கு இருக்கும் எதிர்பார்ப்பு புரியாமல் நீங்க எல்லாம் என்ன தயாரிப்பு நிறுவனமோ.. என கூறியுள்ளார்.
சில மாதங்களுக்கு முன் 'ஆயிரத்தில் ஒருவன்-2' வெளியாகும் என்ற அறிவிப்பு மட்டுமே உள்ள நிலையில் மேற்படி தகவல்கள் எதுவும் வெளியாகாததால் பலரும் இந்த படத்தின் இரண்டாம் பாகம் குறித்து அப்டேட் கேட்டு வருகின்றனர்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.