சினிமா செய்திகள்

நார்வே தமிழ்த்திரைப்பட விழா தமிழர்களுக்கு பெருமை சேர்க்கும் விழா- ரோபா சங்கர்

Published On 2024-02-22 09:19 GMT   |   Update On 2024-02-22 09:19 GMT
  • நார்வே தமிழ்த்திரைப்பட விழா தமிழர்களுக்கு பெருமை சேர்க்கும் விழா.
  • விருது தம்பி கே.பி.ஒய். பாலாவுக்கு கிடைத்திருப்பது மகிழ்ச்சி.

15-வது சர்வதேச நார்வே தமிழ்த் திரைப்பட விழா மற்றும் விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட படங்கள் அறிவிப்பு நிகழ்ச்சி மற்றும் 'வீரத்தின் மகன்' திரைப்பட திரையிடல் சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தயாரிப்பாளரும், இயக்குநருமான வி.சி.குகுநாதன், நடிகர் போஸ் வெங்கட், இயக்குநர் கெளரவ், தயாரிப்பாளர்கள் சங்க செயற்குழு உறுப்பினர் விஜயமுரளி, இயக்குநர் கலைப்புலி ஜி.சேகரன், பி.ஆர்.ஓ சங்க முன்னாள் செயலாளர் பெரு துளசி பழனிவேல் உள்ளிட்ட பலர் கலந்துக்கொண்டார்கள்.

நிகழ்ச்சியில் நடிகர் ரோபோ சங்கர் பேசுகையில், "கலைஞர்கள் மீது அன்பும், பேராதரவும் காட்டக்கூடியவர்கள் இலங்கை தமிழர்கள் தான், அவர்களை விட யாரும் இருக்க முடியாது. நார்வே தமிழ்த்திரைப்பட விழா தமிழர்களுக்கு பெருமை சேர்க்கும் விழா. அதில், புரட்சிக்கலைஞர் விஜயகாந்த் பெயரில் விருது வழங்குவது, அந்த விருது தம்பி கே.பி.ஒய். பாலாவுக்கு கிடைத்திருப்பது மகிழ்ச்சி. அந்த விருதுக்கு தகுதியானவர் தம்பி பாலா.

புரட்சிக்கலைஞர் விஜயகாந்த் பெயரில் வழங்கப்படும் முதல் விருது அவருக்கு கிடைத்திருப்பதில் எனக்கும் மகிழ்ச்சி. இதுபோல் பலர் கலைஞர்களை நீங்கள் கெளரவிக்க வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். நார்வே தமிழ்த் திரைப்பட விழாவை தமிழ்நாட்டில் நடத்த வேண்டும், தமிழர்களுக்கு பெருமை சேர்க்க வேண்டும்" என்றார்.

Tags:    

Similar News