சினிமா செய்திகள்

காங்கிரஸ் மந்திரி சர்ச்சை கருத்து- ஆதரவு தந்த நடிகர், நடிகைகளுக்கு சமந்தா நன்றி

Published On 2024-10-17 09:25 GMT   |   Update On 2024-10-17 09:25 GMT
  • எனக்கு எதிராக கருத்து தெரிவித்த போது தெலுங்கு உள்ளிட்ட சினிமா குழுவினர் என்னை கைவிடவில்லை.
  • என்னுடைய சிரமங்களை எதிர்கொள்ள இந்த ஆதரவு முக்கியமானது.

நடிகை சமந்தா-நாக சைதன்யா விவாகரத்துக்கு முன்னாள் முதல்-மந்திரி சந்திரசேகர ராவின் மகன் கே.டி. ராமராவ் தான் காரணம் என தெலுங்கானா மாநில காங்கிரஸ் பெண் மந்திரி கொண்டா சுரேகா என்பவர் கூறினார். இது தெலுங்கு திரை உலகினர் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

காங்கிரஸ் பெண் மந்திரிக்கு எதிராக ஒட்டுமொத்த திரையுலக நடிகர், நடிகைகள் ஒன்று திரண்டு கடுமையான வார்த்தைகளால் எதிர்ப்பு தெரிவித்தனர்.

நடிகர்கள் ஜூனியர் என்டிஆர், ராம்சரண், எஸ்.எஸ்.ராஜமவுலி, நானி, மகேஷ்பாபு, விஜய் தேவரகொண்டா ,ரோஜா, குஷ்பு பிரகாஷ்ராஜ் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்தனர். இந்த நிலையில் தனக்கு ஆதரவளித்த நடிகர்- நடிகைகளுக்கு சமந்தா நன்றி தெரிவித்துள்ளார்.

எனக்கு எதிராக கருத்து தெரிவித்த போது தெலுங்கு உள்ளிட்ட சினிமா குழுவினர் என்னை கைவிடவில்லை. என் மீது அவர்கள் வைத்திருந்த அன்பும் நம்பிக்கையும் நான் மீண்டும் எழுச்சி பெற உதவியது. என்னுடைய சிரமங்களை எதிர்கொள்ள இந்த ஆதரவு முக்கியமானது.

அவர்களின் ஆதரவு இல்லாமல் எனது நிலைமையை சமாளிக்க எனக்கு அதிக நேரம் எடுத்திருக்கும். என்னை சுற்றி உள்ளவர்களின் நம்பிக்கையால் தான் நான் இன்று இங்கே இருக்கிறேன் என்றார்.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Tags:    

Similar News