சினிமா செய்திகள்

விடுதலை 2 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியானது

Published On 2024-07-17 06:19 GMT   |   Update On 2024-07-17 06:19 GMT
  • விடுதலை பாகம் ஒன்று பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு மக்களின் பாராட்டை வென்றது.
  • விடுதலை 2 படப்பிடிப்பு ஏற்கனவே தொடங்கப்பட்டு பல கட்டங்களாக நடைபெற்றது.

இயக்குநர் வெற்றிமாறன் பொல்லாதவன், விசாரணை, ஆடுகளம், அசுரன், வடசென்னை போன்ற பல வெற்றிப் படங்களை இயக்கியதன் மூலம் ரசிகர்கள் மனதில் நிலையான இடம் பிடித்தவர். பெயருக்கு ஏற்றார் போல இயக்கும் படம் அனைத்தும் வெற்றியே.

தொடர்ந்து அவர் இயக்கிய எல்லா திரைப்படமும் வெற்றி பெற்றதன் காரணத்தினால் அவர் இயக்கும் திரைப்படத்திற்கு மக்களின் எதிர்பார்ப்பு எப்பொழுதும் உண்டு.

இவர் கடந்த 2023 ஆம் ஆண்டு சூரி, விஜய் சேதுபதி நடிப்பில் விடுதலை திரைப்படத்தை இயக்கியிருந்தார். விடுதலை படத்தின் முதல் பாகமாக வெளியான இந்த படத்தில் சூரி, விஜய் சேதுபதியுடன் இணைந்து கௌதம் வாசுதேவ் மேனன், சேத்தன், பவானி ஸ்ரீ, இளவரசு போன்ற நடிகர்கள் நடித்திருந்தனர். சூரியின் திரைப்பயணத்தில் இப்படம் திருப்பு முனையாக அமைந்தது.

இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று பல்வேறு தரப்பினரால் பாராட்டப்பட்டது. இளையராஜாவின் இசையில் வெளியான பாடல்களும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அதைத்தொடர்ந்து விடுதலை இரண்டாம் பாகத்தை இயக்கி வருகிறார் வெற்றிமாறன். இதில் சூரி, விஜய் சேதுபதி, மஞ்சு வாரியர், அட்டக்கத்தி தினேஷ் ஆகியோர் நடிக்கின்றனர்.

விடுதலை பாகம் ஒன்று பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு மக்களின் பாராட்டை வென்றது. விடுதலை 2 படப்பிடிப்பு ஏற்கனவே தொடங்கப்பட்டு பல கட்டங்களாக நடைபெற்றது.

இந்நிலையில் விடுதலை 2-ம் பாகத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் இன்று வெளியாகியுள்ளது. விஜய் சேதுபதி - மஞ்சு வாரியர் இருக்கும் புகைப்படமும், ரத்த களரியுடன் விஜய் சேதுபதி இருக்கும் புகைப்படமும் வெளியாகியுள்ளது. இந்த போஸ்டர்களில் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் என்று படக்குழு குறிப்பிட்டுள்ளது.

படக்குழுவினர் வெளியிட்ட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில்

"உயிர்ப்ப ஊரல்லர் மன்ற செயிர்ப்பவர்

செம்மல் சிதைக்கலா தார்"

என்ற திருக்குறள் இடம்பெற்றுள்ளது. அதற்கு விளக்கமானது பகைவரின் செருக்கைக் கெடுக்கும் வாய்ப்பு வந்த போதும், அவர் மீதுள்ள இகழ்ச்சியால் அதனைச் செய்யாத அரசர், பின்னர், உயிரோடு இருப்பதற்கு உரியவர் ஆகார் என்பதாகும்.

இந்த குறளுக்கும் விடுதலை படத்திற்கும் எம்மாதிரியான ஒப்பீட்டு இருக்குமென பொறுத்து இருந்துதான் பார்க்கவேண்டும்.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Tags:    

Similar News