வைரலாகும் 'கூலி' படத்தின் டைட்டில் டீசர்
- இதுவரை யூடியூபில் 50 லட்ச பார்வைகளை பெற்று டிரெண்டிங் நம்பர் 1 இல் உள்ளது.
- சன் பிக்சர்ஸ் இத்திரைப்படத்தை தயாரிக்கவுள்ளனர்.
லோகேஷ் கனகராஜ் அவரது படங்களின் ப்ரோமோ வீடியோவை மிக வித்தியாசமாகவும் நேர்த்தியாகவும் கதையோடு ஒரு அங்கமாக அந்த ப்ரோமோ வீடியோக்களை எடுப்பதில் திறம் பெற்றவர். அதைத்தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நேற்று எல்லாரும் எதிர்பார்க்கப்பட்ட தலைவர் 171- வது படமான கூலி திரைப்படத்தின் டைட்டில் டீசர் வெளியானது.
இதற்கு முன் விக்ரம் படத்தின் ப்ரோமொ வீடியோவில் வரும் 'ஆரம்பிக்கலாங்களா', லியோ படத்தில் வரும் 'ப்லடி ஸ்வீட்' வசனங்கள் மிகவும் வைரலாகியது.
அதைத் தொடர்ந்து கூலி படத்தின் ப்ரோமோ வீடியோவில் ஒரு கேங்கஸ்டர் கும்பல் துறைமுகத்தில் பல வகையான தங்கத்தை கடத்தி அதை அனுப்புவதற்கு பேக் பண்ணி கொண்டு இருக்கின்றனர். அப்பொழுது ஒரு ஃபோன்காலில் துறைமுகத்தில் செக்யூரிட்டி அடித்து விட்டு ஒருவன் உள்ளே வருகிறான் என்ற தகவலை கூறுகிறான்.
ரஜினிகாந்த் உள்ளே வந்து அனைவரையும் மாஸாகவும், ஸ்டைலாகவும் அடிக்கிறார். அடிக்கும் பொழுது 1982 ஆம் ஆண்டு வெளிவந்த 'ரங்கா' படத்தில் புகழ் பெற்ற 'அப்பாவும் தாத்தாவும்" என்ற வசனத்தை பேசிக்கொண்டே அடிக்கிறார்.
அடித்து முடித்துவிட்டு லோகேஷ் கனகராஜின் ஃபைனல் டச்சாக இதில் ரஜினிகாந்து 'முடிச்சடலாம் மா!!' என்ற வசனத்தை பேசுகிறார். தற்பொழுது இந்த டைடில் டீசர் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. . இதுவரை யூடியூபில் 50 லட்ச பார்வைகளை பெற்று டிரெண்டிங் நம்பர் 1 இல் உள்ளது.
ரஜினிகாந்த இதற்கு முன் உழைப்பாளி, மன்னன், முள்ளும் மலரும் போன்ற படங்களில் கூலி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் எந்த மாதிரியான கதாப்பாத்திரத்தில் நடித்து இருப்பார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உருவாகியுள்ளது.
இதற்குமுன் 1983 ஆம் ஆண்டு அமிதாப் பச்சன் நடிப்பில் மன்மோகன் தேசாய் இயக்கத்தில் இந்தி திரைப்படமான கூலி வெளியாகியது.
1991 ஆம் ஆண்டு சுரேஷ் பாபு தயாரிப்பில் ராகவேந்திரா ராவ் இயக்கத்தில் வெங்கடேஷ் மற்றும் தபு நடிப்பில் தெலுங்கு திரைப்படமான கூலி வெளியாகியது.
1995 ஆம் ஆண்டு பி. வாசு இயக்கத்தில் சரத்குமார் மற்றும் மீனா இணைந்து நடித்து வெளியான தமிழ் திரைப்படமான கூலி வெளியாகியது.
இதைத்தொடர்ந்து தற்பொழுது ரஜிகாந்தின் 171 - வது படத்திற்கும் 'கூலி' என்ற தலைப்பை வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படம் லோகேஷின் சினிமாடிக் யூனிவர்சில் சேராது என தெரிவித்துள்ளார். அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கவுள்ளார். அன்பறிவு ஸ்டண்ட் இயக்குனர்களாக பணியாற்ற போகிறார்கள். சன் பிக்சர்ஸ் இத்திரைப்படத்தை தயாரிக்கவுள்ளனர். இப்படத்தை குறித்து ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பு உண்டாகியுள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.