சினிமா செய்திகள்

பிரேமலு இயக்குனரின் அடுத்த படைப்பு - I Am Kathalan டிரைலர் வெளியீடு

Published On 2024-10-26 15:10 GMT   |   Update On 2024-10-26 15:10 GMT
  • இந்தாண்டு மலையாளத்தில் வெளியான பிரேமலு திரைப்படம் மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.
  • திரைப்படம் வரும் நவம்பர் 7 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

இந்தாண்டு மலையாளத்தில் வெளியான பிரேமலு திரைப்படம் மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இத்திரைப்படத்தை கிரிஷ் ஏடி இயக்கியிருந்தார். இப்படத்தில் நஸ்லேன், மமிதா பைஜு, சங்கீத் பிரதாப் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தனர். இப்படம் தமிழிலும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

கிரிஷ் ஏடி இதற்கு முன் தண்ணீர் மாதன் தினங்கள், சூப்பர் ஷரன்யா ஆகிய படங்களை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தற்பொழுது நஸ்லேன் கதாநாயகனாக நடித்துள்ள Iam kathalan திரைப்படத்தை இயக்கியுள்ளார். படத்தின் டிரைலர் தற்பொழுது வெளியாகியுள்ளது. திரைப்படம் வரும் நவம்பர் 7 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இத்திரைப்படம் ஒரு சைபர் கிரைம் கதைக்களத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

நஸ்லேன் ஒரு ஹேக்கர் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். அவர் இருக்கும் ஊரின் பெரிய நிறுவனத்தை ஹேக் செய்வது மற்றும் அதனால் ஏற்படக்கூடிய பிரச்சனைகளை பற்றிய காட்சிகள் டிரைலரில் அமைந்துள்ளது.

இத்திரைப்படத்திற்கு பிறகு கிரிஷ் இயக்கத்தில் நஸ்லேன் பிரேமலு 2 திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். நஸ்லேன் அஜித் நடிக்கும் குட் பேட் அக்லி திரைப்படத்திலும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Full View

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Tags:    

Similar News