சினிமா செய்திகள்
null

மன்னிப்பு கேட்ட விஜய் ஆண்டனி

Published On 2024-03-16 13:31 GMT   |   Update On 2024-03-16 13:37 GMT
  • இயேசு கிறிஸ்து திராட்சை ரசத்தை குடித்துள்ளார் என்று அவர் கூறிய வார்த்தை சர்ச்சையை உண்டாக்கியது
  • இந்நிலையில் விஜய் ஆண்டனி பொது மன்னிப்பு அறிக்கையை வெளியிட்டுள்ளார்

தற்பொழுது விஜய் ஆண்டனி ரோமியோ படத்தில் நடித்துள்ளார். மிருணாளினி கதாநாயகியாக நடித்துள்ளார்.விஜய் ஆண்டனி இப்படத்தை தயாரித்து இருக்கிறார். பரத் தனசேகர் இப்படத்தின் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்.

இந்நிலையில் நேற்று ரோமியோ படக்குழுவினர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, ரோமியோ படத்தின் ட்ரெயிலரில் வரக்கூடிய ஒரு காட்சியை குறிப்பிட்டு ஏன் அந்த முதலிரவு காட்சியில் மது குடித்தீர்கள் என செய்தியாளர் கேள்வி கேட்டார்.

அதற்கு விஜய் ஆண்டனி " மது என்பதில் ஆண், பெண் என வேறுபடுத்தி பார்க்கக் கூடாது. குடிப்பது அனைத்து பாலினருக்கும் பொதுவான ஒன்று. முந்தைய காலத்தில் இருந்து மது என்பது இருந்து வந்துள்ளது. அது காலத்திற்கு ஏற்ற மாதிரி பெயரை மாற்றிக் கொண்டது. சாராயம் என்ற பெயரில் முன் குடித்துக் கொண்டு இருந்தோம் இப்பொழுது கம்பனி பெயர்களால் உபயோகிக்கிறோம்.

 இயேசு கிறிஸ்து திராட்சை ரசத்தை குடித்துள்ளார் என்று அவர் கூறிய வார்த்தை சர்ச்சையை உண்டாக்கியது. இந்நிலையில் தமிழ்நாடு கிறிஸ்தவ சபைகளின் கூட்டமைப்பு விஜய் ஆண்டனிக்கு கண்டனம் தெரிவித்துள்ளது. பொது மன்னிப்பு கேட்காவிட்டால் விஜய் ஆண்டனி வீட்டிற்கு முன்னால் ஆர்பாட்டம் நட்த்துவோம் என அறிக்கை வெளியிட்டனர்.

இந்நிலையில் விஜய் ஆண்டனி பொது மன்னிப்பு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில் அவர் அன்பார்ந்த கிறிஸ்துவ சபை கூட்டமைப்பின் உறுப்பினர்களே. திராட்சை ரசம் தற்போது கண்டுபிடிக்கப்பட்டதல்ல இரண்டாயிரம் ஆண்டுகள் முன்னதாகவே புழக்கத்தில் இருந்ததுதான்.தேவாலயங்களிலும் பயன்படுத்தப்பட்டது, இயேசு பிரான் பயன்படுத்தி இருக்கிறார். என்று கூறி இருந்தேன்.

ஒரு பத்திரிக்கயாளர் நண்பர் கேட்ட கேள்விகளுக்கு பதில் சொன்னதை , நான் பேசியதை இணைத்து தவராக அர்த்தப்படுத்தியதால் அது தவறாக எண்ணி உங்களைப் போல சிலர் மனம் புண் பட்டிருக்கிறீர்கள். மக்களுக்காக ரத்தம் சிந்தி உயிர் நீத்த, மதங்களுக்கு, அப்பாற்பட்ட இயேசுவைப்பற்றி தவறாக சித்தரிக்க எனக்கு கனவிலும் வராது. என மனமார்ந்த மன்னிப்பை தெரிவித்து இருக்கிறார்.


உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Tags:    

Similar News