சினிமா செய்திகள்
null

தமிழகத்துக்கு மட்டும் ஏன் இப்படி? பிரதமர் மோடிக்கு நடிகர் விஷால் கேள்வி

Published On 2024-07-21 03:01 GMT   |   Update On 2024-07-21 03:03 GMT
  • ஏன் யாரும் இந்த விஷயத்தை பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை?
  • இந்த ஆண்டு திரைத்துறைக்கு மிக மோசமான ஆண்டாக மாறி வருகிறது.

முன்னாள் துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடுவின் 75 ஆவது பிறந்தநாள் விழா நேற்று நடைபெற்றது. அதில் நடிகர் விஷால் கலந்து கொண்டார். நிகழ்ச்சி முடிந்து செய்தியாளர்களை சந்தித்த விஷால், பிரதமர் மோடிக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து பேசிய நடிகர் விஷால், "தமிழ்நாட்டில் உள்ள ஜிஎஸ்டி வரி விவகாரத்தை கவனிக்குமாறு பிரதமரை வேண்டுகிறேன். தமிழகத்தில் மட்டும்தான் இரண்டு வரி வசூலிக்கும் முறை பின்பற்றப்படுகிறது. "ஒரே வரி ஒரே நாடு" என்று நீங்கள் கூறிய போது உங்களை நம்பினேன், எனினும் ஏன் தமிழகத்தில் மட்டும் இப்படி நடக்கிறது? ஏன் யாரும் இந்த விஷயத்தை பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை?"

"உண்மையில் இது திரைத்துறையை பெரிதும் பாதிக்கிறது. 8 சதவீதம் உள்ளாட்சி வரி செலுத்துவது அனைத்து தயாரிப்பாளர்களுக்கும் பெரிய சுமையாக உள்ளது. திரைத்துறை மிக மோசமாக பாதிக்கப்படுகிறது. இந்த ஆண்டு திரைத்துறைக்கு மிக மோசமான ஆண்டாக மாறி வருகிறது."

"யாரும் இழப்பை பற்றி வெளியில் பேசுவதில்லை. அனைவரும் வலியை மனதிற்குள் வைத்துக் கொள்கின்றனர். நாங்கள் ஆடம்பர வாழ்க்கையை கேட்கவில்லை, அனைவரும் சாதாரண வாழ்க்கையை வாழ்வதற்கு வாய்ப்பு கொடுங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன்," என்றார்.

Tags:    

Similar News