சினிமா செய்திகள்

வயநாடு நிலச்சரிவு : நம்மால் முடிந்த உதவிகளை செய்வோம் - ஜி.வி.பிரகாஷ்

Published On 2024-07-31 12:23 GMT   |   Update On 2024-07-31 12:23 GMT
  • வயநாடு சகோதர சகோதரிகளின் உயிரிழப்பை கண்டு மனவேதனையில் தவிக்கிறேன்.
  • கேரளம் மீண்டு வர துணை நிற்போம்.

கேரள மாநிலம், வயநாடு மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள நிலச்சரிவு மிகப்பெரிய சம்பவமாக மாறி இருக்கிறது. அதிலும் முண்டக்கை பகுதி மிகப்பெரிய அழிவை சந்தித்து இருக்கிறது.

அங்கிருந்த நூற்றுக்கணக்கான வீடுகள் மண்ணுக்குள் புதைந்துள்ளன. இதனால் அந்த இடத்தில் வீடுகள் தடமே இல்லாமல் காட்சி அளிக்கிறது. அனைத்து இடங்களும் மண்ணாலும், மரங்கள் மற்றும் பாறைகளாலும் மூழ்கடிக்கப்பட்டுள்ளன.

கேரள நிலச்சரிவில் சிக்கி இதுவரை 200 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், வயநாடு நிலச்சரிவு தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் பதிவிட்டுள்ளார்.

அவரது பதிவில், "வயநாடு துயரம் , இயற்கை பேரிடர் எனும் போதிலும் என் சகோதர சகோதரிகளின் உயிரிழப்பை கண்டு தாங்க முடியாத மனவேதனையில் செய்வதறியாது தவிக்கிறேன். இந்த நெருக்கடியான சூழ்நிலையில் அரசுத்துறையை சார்ந்த பணியாளர்கள் , தனியார் தொண்டு நிறுவனங்களின் மனிதநேய உள்ளங்கள் செய்து வரும் அளப்பரிய களப்பணிக்கு அனைவரும் நம்மால் முடிந்த உதவிகளை செய்வோம். கேரளம் மீண்டு வர துணை நிற்போம்" என்று அவர் பதிவிட்டுள்ளார்.

Tags:    

Similar News