கோலிவுட்டை மீட்டெடுக்குமா 'அரண்மனை 4' ?
- தமன்னா, ராஷி கண்ணா, யோகி பாபு, கோவை சரளா, விடிவி கணேஷ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
- சென்னையில் உள்ள பெரும்பாலான திரையரங்களிலும் மால்களில் உள்ள திரையரங்குகளில் இன்று ஹவுஸ் ஃபுல்லாக ஓடிக்கொண்டு இருக்கிறது
சுந்தர் சி இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் அரண்மனை 4. இந்த படத்தின் முதல் மூன்று பாகங்களை போன்றே இந்த படத்திலும் சுந்தர் சி நடித்துள்ளார். இவருடன் தமன்னா, ராஷி கண்ணா, யோகி பாபு, கோவை சரளா, விடிவி கணேஷ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ஹிப்ஹாப் ஆதி இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். குஷ்பு சார்பில் அவ்னி சினிமாக்ஸ் இப்படத்தை தயாரித்துள்ளனர். மே 3 { இன்று} திரையரங்குகளில் வெளியானது. நேற்று திரைப்பிரபலங்களுக்கு திரைமுன்னோட்டம் காட்சியிடப்பட்டது. அதைப் பார்த்த அனைவரும் படம் நன்றாகவுள்ளது என கருத்துக்களை பகிர்ந்தனர்.
சென்னையில் உள்ள பெரும்பாலான திரையரங்களிலும் மால்களில் உள்ள திரையரங்குகளில் இன்று ஹவுஸ் ஃபுல்லாக ஓடிக்கொண்டு இருக்கிறது. படம் பார்த்த பெரும்பாலானோர் பாசிடிவ் ரிவியுகளை சமூகவலை தளங்களில் பகிர்ந்துக் கொண்டு வருகின்றனர். இதைத்தொடர்ந்து அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தில் உள்ள அனைத்து திரையரங்களிலும் வேகமாக அரண்மனை 4 படத்திற்கு புக்கிங் பதிவாகி வருகிறது.
சுந்தர்.சி அவரது மற்ற பாகங்களை போலவே இப்படத்தை எடுத்து இருந்தாலும். இந்த பாகத்தில் விஸ்வல் எஃபக்ட்ஸ்களும், நகைச்சுவை காட்சிகள் மற்றும் திகில் காட்சிகள் நன்றாக வொர்க் அவுட் ஆகியுள்ளது.
சமீபத்தில் தமிழ் படங்களில் ரீரிலீஸ் படங்களே அதிகம் திரையரங்குகளில் ஓடுகிறது கில்லி படத்தின் ரீ ரிலீஸ் மக்களிடம் பெரும் ஆதரவு பெற்றது. அதைத் தொடர்ந்து இரண்டு நாட்கள் முன்பு அஜித்குமார் பிறந்தநாளை முன்னிட்டு வெளியான தீனா, பில்லா போன்ற படங்கள் கில்லியைப் போல் வரவேற்பு கிடைக்கவில்லை.
இந்நிலையில் மலையாள திரைப்படங்களுக்கு கிடைத்த ஆதரவு கூட சமீபத்தில் வெளிவந்த தமிழ் திரைப்படங்களுக்கு கிடைக்கவில்லை.இச்சூழ்நிலையில் தற்பொழுது அரண்மனை 4 வெளியாகியுள்ளது.
கோடை விடுமுறைக்கு தக்க சமையத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கொண்டாடும் திரைப்படமாக இது அமைந்துள்ளது அரண்மனை 4. இப்படத்திற்கு மக்களிடையே பெருமாதரவு பெற்று வெற்றியடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.