சினிமா

படம் நல்லா இல்லனா வெளியே சொல்லிக்காதீங்க... எம்.எஸ். பாஸ்கர் பேச்சால் சர்ச்சை

Published On 2024-06-13 15:29 GMT   |   Update On 2024-06-13 15:29 GMT
  • பொதுமக்கள் 120 ரூபாய் அல்லது 200 ரூபாய் கொடுத்து படம் பார்க்கின்றனர்.
  • நீங்க கொடுக்கிற டிக்கெட் பல குடும்பத்தை வாழ வைக்கும்.

முண்டாசுப்பட்டி, ராட்சசன், கட்டா குஸ்தி என விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான பல படங்களுக்கு உதவி இயக்குனராக பணியாற்றி வந்த ஷாஜி சலீம் இயக்கத்தில் விதார்த், ஸ்வேதா டோரத்தி, விபின், எம். எஸ். பாஸ்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ள லாந்தர் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது.

லாந்தர் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய எம். எஸ். பாஸ்கர் படங்களை பார்த்து விட்டு பிடிக்கவில்லை என்றால் ரசிகர்கள் அமைதியாக இருக்க வேண்டும் என்றும் நல்லா இல்லை என மற்றவர்களிடம் சொல்லக் கூடாது என பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பொதுமக்கள் 120 ரூபாய் அல்லது 200 ரூபாய் கொடுத்து படம் பார்க்கின்றனர். அதை வைத்து யாரும் மாடமாளிகையோ கூட கோபுரமோ கட்டப் போறதில்லை என எம்.எஸ். பாஸ்கர் பேசியதும் அரங்கத்தில் இருந்தவர்களின் முகமே மாறிவிட்டன. சினிமாவில் பலர் கஷ்டப்பட்டு உழைக்கிறோம். நீங்க கொடுக்கிற டிக்கெட் பல குடும்பத்தை வாழ வைக்கும்.

படம் பிடிக்கவில்லை என்றால், படம் பார்த்துக் கொண்டிருக்கும் போதே தியேட்டரில் இருந்து மொக்கை, யாரும் தியேட்டருக்கு வர வேண்டாம் என போட்டு படத்தை காலி பண்ணிடுறாங்க என பேசியுள்ளார். நல்ல படத்தை எடுக்க வேண்டும் என சினிமா கலைஞர்களுக்கு அறிவுரை வழங்காமல் படம் நல்லா இல்லை என விமர்சிக்கக் கூடாது என எம்.எஸ். பாஸ்கர் பேசுவது சரியல்ல என சமூக வலைதளங்களில் அவருக்கு எதிரான கமெண்ட்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.

Tags:    

Similar News