சினிமா
இளம் இயக்குனர் ஒருவர் ஒரு படத்தில் ஒப்பந்தம் ஆகி திடீரென்று விலகி இருப்பதால், அதற்கான காரணங்கள் தற்போது வெளியாகி இருக்கிறதாம்.
பாலிவுட் வெளியாகி சூப்பர் ஹிட்டான படத்தை தமிழில் ரீமேக் செய்ய போட்டா போட்டி நடைபெற்றதாம். ஒரு வழியாக அந்த படத்தின் உரிமையை பிரபல நடிகரின் தந்தை கைப்பற்றினாராம். இந்த படத்தை இயக்குவதற்காக தேடுதல் வேட்டை நடைபெற்றதாம். இதில் முதலில் ஒரு இயக்குனர் ஒப்பந்தம் ஆகி படம் தொடங்க தாமதம் ஆனதால் படத்தில் இருந்து வெளியேறினாராம்.
அதன்பின் இளம் இயக்குனர் ஒருவர் ஒப்பந்தம் செய்யப்பட்டாராம். படம் தொடங்கப்படும் நிலையில், இயக்குனர் விலகி விட்டாராம். காரணம் விசாரித்தால், படத்தின் தயாரிப்பாளர் இயக்குனருக்கு தொல்லை கொடுத்திருக்கிறாராம். படத்தின் கதை மற்றும் திரைக்கதை உள்ளிட்ட அனைத்திலும் தயாரிப்பாளர் நுழைந்து பல மாற்றங்களை செய்திருப்பதாகவும் கூறப்படுகிறதாம். இதனால்தான் இயக்குனர் விலகி இருக்கிறாராம்.