சினிமா
கடன் பிரச்சனையில் சிக்கி தவிக்கும் நடிகர்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் பிரபல நடிகர் ஒருவர் கடன் பிரச்சனையால் தவித்து வருகிறாராம்.
சின்னத்திரையில் இருந்து பெரிய திரைக்கு வந்த நடிகர், குறுகிய காலத்தில் தன்னுடைய அந்தஸ்தை மாற்றிக்கொண்டு அதிக சம்பளம் வாங்கும் நடிகர் பட்டியலில் இடம் பிடித்தாராம். தன்னுடைய நண்பர் மூலம் தன்னுடைய பணத்தை வைத்து பெரிய பட்ஜெட் படங்களை தயாரித்து தான் ஒரு பெரிய நடிகர் என்பதை நிரூபித்து கொண்டாராம்.
இந்நிலையில் தான் தயாரித்த படங்கள் அனைத்திலும் நஷ்டம் ஏற்பட்டதால் கடன் பிரச்சினையில் சிக்கி இருக்கிறாராம் நடிகர். இதை எப்படி சரிகட்டுவது என்று தெரியாமல் இருக்கிறாராம். மேலும் வருடத்துக்கு இரண்டு படங்களில் நடித்து, கடன் பிரச்சினையை தீர்த்து விடலாம் என்று திட்டம் போட்டு இருக்கிறாராம்.