சினிமா

அமரனை பார்த்து என்னை கட்டிப்பிடித்து அழுதாங்க... சாய் பல்லவி

Published On 2024-11-05 07:55 GMT   |   Update On 2024-11-05 07:55 GMT
  • ரசிகர்களின் மத்தியில் வரவேற்பை பெற்று இப்படம் வசூலில் சாதனை படைத்து வருகிறது.
  • திரைப்படத்தை பார்த்து பல திரைப்பிரபலங்கள் முதல் அரசியல் பிரமுகர்கள் என அனைவரது பாராட்டையும் பெற்று வருகிறது.

நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், நடிகர் சிவகார்த்திகேயன், நடிகை சாய் பல்லவி நடித்த, 'அமரன்' திரைப்படம் தீபாவளி அன்று வெளியானது. மறைந்த ராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை மையமாக வைத்து தயாரிக்கப்பட்டுள்ள இப்படத்தில், முகுந்த் வரதராஜன் கதாபாத்திரத்தில் சிவகார்த்திகேயனும், முகுந்தின் மனைவி இந்து ரெபேக்கா கதாபாத்திரத்தில், சாய் பல்லவியும் நடித்துள்ளனர்.

ரசிகர்களின் மத்தியில் வரவேற்பை பெற்று இப்படம் வசூலில் சாதனை படைத்து வருகிறது. மேலும் இத்திரைப்படத்தை பார்த்து பல திரைப்பிரபலங்கள் முதல் அரசியல் பிரமுகர்கள் என அனைவரது பாராட்டையும் பெற்று வருகிறது.

இந்த நிலையில், 'அமரன்' திரைப்படத்தின் வெற்றிவிழா சென்னையில் நடைபெற்றது. இதில், இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி, நடிகர்கள் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி, இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய நடிகை சாய் பல்லவி, இந்த படத்தின் வெற்றிக்கு பின்னாடி நிறைய பேருடைய உழைப்பு இருக்கு. விமர்சனங்கள் அழகா எழுதி இருந்தாங்க. ஒரு படத்தை பார்க்கும் போது இந்த சீன் நல்லா இருக்கு, அது நல்லா இருக்குன்னு சொல்வாங்க. ஆனா இந்த படத்தை பார்த்தவர்கள் என்னிடம் எதுவும் பேசவில்லை, என்னை கட்டிப்பிடித்து அழுதாங்க. இதுவே ஒரு பவர்புல்லான்னா ஸ்டேட்மெண்டாக தான் தெரிஞ்சது. அப்படி ஒரு படத்தில் நான் ஒரு பார்ட்டா ப்ளே பண்ணதுக்கு ரொம்பவே சந்தோசம் படுறேன். அதுவும் இந்து மாதிரி ஒரு கேரக்டரா ப்ளே பண்ணதுக்கு ராஜ்குமார் சாருக்கு தாங்க்யூ.. ரங்கூன் படம் கெளதம் கார்த்திக்குக்கு கரியர் மாற்றம் அடையுற படமா இயக்குநர் கொடுத்தார். இப்போது சிவகார்த்திகேயனோட கரியரை அடுத்தக் கட்டத்துக்கு கொண்டு போகிற அளவுக்கு ஒரு படம் கொடுத்துருக்கார். அந்த மாதிரி எனக்கு ஒரு படம் கொடுக்கணும்னு நான் துண்டு போட்டு வச்சுக்கிறேன் என்றார்.


உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Tags:    

Similar News