கிரிக்கெட் (Cricket)
குஜராத் அபார பந்துவீச்சு - ராஜஸ்தானை 118 ரன்களில் கட்டுப்படுத்தியது
- டாஸ் வென்ற ராஜஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது.
- முதலில் ஆடிய அந்த அணி 118 ரன்களை மட்டுமே எடுத்தது.
ஜெய்ப்பூர்:
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ், குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற ராஜஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, ராஜஸ்தான் அணி முதலில் களமிறங்கியது. குஜராத் அணியின் துல்லியமான பந்துவீச்சில் ராஜஸ்தான் அணி சிக்கித் திணறியது.
கேப்டன் சஞ்சு சாம்சன் அதிகபட்சமாக 30 ரன்னும், டிரெண்ட் போல்ட் 15 ரன்னும் எடுத்தனர்.
இறுதியில், ராஜஸ்தான் அணி 17.5 ஓவரில் 118 ரன்னுக்கு ஆல் அவுட்டானது.
குஜராத் சார்பில் ரஷீத் கான் 3 விக்கெட்டும், நூர் அகமது 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 119 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் அணி களமிறங்குகிறது.