கிரிக்கெட் (Cricket)

எங்களில் யாரையும் டோனியுடன் ஒப்பிட முடியாது- கேஎல் ராகுல்

Published On 2023-12-16 20:20 IST   |   Update On 2023-12-16 20:20:00 IST
  • இப்போதும் இந்திய அணியில் கேப்டன் என்ற பெயரை கேட்டால் டோனி தான் அனைவரது நினைவுக்கு வருவார்.
  • டோனி தலைமையிலான இந்திய அணி 2011 உலகக் கோப்பையை 28 வருடங்கள் கழித்து இந்தியா வெற்றி பெற்றது.

ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா தோல்வியை சந்தித்து 2011 போல சொந்த மண்ணில் கோப்பையை வெல்லும் பொன்னான வாய்ப்பை நழுவ விட்டது. அதனால் 5 ஐபிஎல் கோப்பைகளை வென்ற அனுபவம் மிகுந்த ரோகித் சர்மா கூட இந்தியாவுக்கு ஐசிசி கோப்பையை வென்று கொடுக்காதது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது. அதே சமயம் 2023 உலகக் கோப்பை தோல்வியால் பல ரசிகர்கள் முன்னாள் கேப்டன் எம்எஸ் டோனியை சமூக வலைதளங்களில் நினைவு கூர்ந்து ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்கள்.

சொந்த மண்ணில் டோனி தலைமையிலான இந்திய அணி 2011 உலகக் கோப்பையை 28 வருடங்கள் கழித்து இந்தியா வெற்றி பெற்றது. அதன் பின் 2013 சாம்பியன்ஸ் டிராபியை வென்ற அவர் உலகிலேயே 3 விதமான வெள்ளைப்பந்து ஐசிசி உலகக் கோப்பைகளை வென்ற ஒரே கேப்டன் என்ற சாதனை படைத்தார். அந்த வகையில் இந்தியாவுக்கு மகத்தான வெற்றிகளை பெற்றுக் கொடுத்த அவர் ஐபிஎல் தொடரிலும் 5 கோப்பைகளை வென்று வெற்றிகரமான கேப்டனாக சாதனை படைத்துள்ளார்.

இந்நிலையில் 2017-ல் கேப்டனாக விடை பெற்றாலும் இப்போதும் இந்திய அணியில் கேப்டன் என்ற பெயரை கேட்டால் டோனி தான் அனைவரது நினைவுக்கு வருவார் என்று கேஎல் ராகுல் நெகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது:-

எம்எஸ் டோனியுடன் யாரையும் ஒப்பிட முடியும் என்று நான் நினைக்கவில்லை. இப்போதும் எங்களுடைய அணியில் லீடர், கேப்டன் என்ற வார்த்தைகளை சொல்லி பேசினால் எம்எஸ் டோனி தான் எங்களுடைய மனதில் முதலாவதாக வருவார்.

என்று ராகுல் கூறினார்.

Tags:    

Similar News