கிரிக்கெட் (Cricket)
இந்தியர்களுக்கு தொடர்ந்து ஊக்கமளிக்க வேண்டும்- சச்சினுக்கு தமிழக முதலமைச்சர் பிறந்தநாள் வாழ்த்து
- மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கருக்கு 50-வது பிறந்தநாள் வாழ்த்துக்கள் என முக ஸ்டாலின் கூறினார்.
- கோடிக்கணக்கான இந்தியர்களுக்கு தொடர்ந்து ஊக்கமளிக்க வேண்டும்.
சச்சின் டெண்டுல்கரின் 50-வது பிறந்தநாளன இன்று, அவருக்கு முன்னாள் கிரிக்கெட் வீரர்கள், சினிமா பிரபலங்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் அவருக்கு தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கருக்கு 50-வது பிறந்தநாள் வாழ்த்துக்கள். எப்போதும் மகிழ்ச்சி, அமைதி, நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும். கோடிக்கணக்கான இந்தியர்களுக்கு தொடர்ந்து ஊக்கமளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.