கிரிக்கெட் (Cricket)

பாகிஸ்தானின் முன்னாள் நடுவர் ஆசாத் ரவூப் மரணம்

Published On 2022-09-15 11:20 IST   |   Update On 2022-09-15 11:20:00 IST
  • 2000 ஆம் ஆண்டில் தனது முதல் சர்வதேச ஒருநாள் போட்டியிலும், 2005 ஆம் ஆண்டு தனது முதல் சர்வதேச டெஸ்ட் போட்டியிலும் நடுவராக பணியாற்றினார்.
  • ஐபிஎல் போட்டிகள் உட்பட 40 முதல் தர போட்டிகளில் நடுவராக பணியாற்றினார்.

லாகூர்:

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் நடுவராக பணியாற்றிய பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த ஆசாத் ரவூப் லாகூரில் மாரடைப்பால் மரணமடைந்தார். அவருக்கு வயது 66. அவரது மரணமடைந்த செய்தி கேட்டு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் ரமிஸ் ராஜா தன்னுடைய டுவீட்டரில், ஆசாத் ரவூப், மரணமடைந்ததாக வந்த செய்தி வருத்தமாக இருந்தது.

அவர் ஒரு நல்ல நடுவர் மட்டுமல்ல, நல்ல நகைச்சுவை உணர்வையும் கொண்டிருந்தார். அவர் எப்போதும் என் முகத்தில் புன்னகையை வரவழைப்பார். அவரது இழப்பால் வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது அனுதாபங்கள்," என்று தெரிவித்தார்.

மறைந்த ஆசாத் ரவூப், 2000 ஆம் ஆண்டில் தனது முதல் சர்வதேச ஒருநாள் போட்டியிலும், 2005 ஆம் ஆண்டு தனது முதல் சர்வதேச டெஸ்ட் போட்டியிலும் நடுவராக பணியாற்றினார்.

2006-ம் ஆண்டில், ஐசிசியின் எலைட் பேனலில் அவர் இடம் பெற்ற அவர் 2013 வரை அங்கம் வகித்தார். அவர் 64 டெஸ்ட் போட்டிகள், 139 ஒருநாள் போட்டிகள், 28 டி20 போட்டிகள் மற்றும் 11 பெண்கள் டி20 போட்டிகளில் நடுவராக மற்றும் டிவி நடுவராக பணியாற்றினார்.

ஐபிஎல் போட்டிகள் உட்பட 40 முதல் தர போட்டிகள், 26 லிஸ்ட் ஏ போட்டிகள் மற்றும் 89 டி20 போட்டிகளிலும் அவர் நடுவராக பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News