ஆன்மிக களஞ்சியம்

நவராத்திரி நவதானியங்கள்!

Published On 2024-10-01 12:15 GMT   |   Update On 2024-10-01 12:15 GMT
  • பராசக்தியின் பாடல்களை வீடுகளிலும், கோவில்களிலும் பாடி அன்னையை ஆராதித்தல் சிறப்பும், மேன்மையும் தரும்.
  • அம்பிகையை சக்தி சொரூபத்தை நினைத்து தியானிப்பதால், சகல பாவங்களும் நிவர்த்தியாகும் என்பது ஐதீகம்.

நவராத்திரி பண்டிகையின் போது ஒவ்வொரு ராத்திரிக்கும் ஒவ்வொரு நவதானியமாக ஒன்பது வகை சுண்டல் செய்து கடவுளுக்குப் படைத்து வழிபடுவர்.

நவதானிய வகைகள் வருமாறு:

* கோதுமை

* பச்சரிசி

* துவரை

* பச்சைப்பயறு

* கடலை

* மொச்சை

* எள்ளு

* உளுந்து

* கொள்ளு

9 நாட்கள் நிறைவடைந்து 10 வது நாளான விஜயதசமி அன்று அம்பிகையானவள், ஆக்ரோஷத்துடன் அதர்மங்களை அழித்து தர்மத்தை நிலைநாட்டி பக்தர்களுக்கு அருள்பாலிப்பதையே இந்த 10 நாட்களின் விரதம் மற்றும் பூஜை குறிக்கிறது.

அம்பிகையை விக்கிரக ரூபத்திலோ, படங்களிலோ பிரதிஷ்டை செய்து முறைப்படி பூஜை செய்யலாம்.

ஒன்பது நாட்களிலும் தேவிபாகவத பாராயணம் செய்யலாம்.

சுமங்கலிகளையும், கன்னிப் பெண்களையும் இல்லத்திற்கு வரவழைத்து, அவர்களை தேவியாகவே கருதி தாம்பூலம், பழங்கள், வஸ்திரங்கள், வீட்டு உபயோகத்திற்கு தேவையான பொருட்களை அவரவர் வசதிக்கேற்ப அளித்து மகிழலாம்.

இந்த நாட்களில் கொண்டைக்கடலை, கடலைப் பருப்பு உள்ளிட்ட பல்வேறு பயறு வகைகளுடன் விதவிதமான நைவேத்யங்களை நாளுக்கு ஒன்றாக படைத்து வழிபட வேண்டும்.

பராசக்தியின் பாடல்களை வீடுகளிலும், கோவில்களிலும் பாடி அன்னையை ஆராதித்தல் சிறப்பும், மேன்மையும் தரும்.

அம்பிகையை சக்தி சொரூபத்தை நினைத்து தியானிப்பதால், சகல பாவங்களும் நிவர்த்தியாகும் என்பது ஐதீகம்.

Similar News