ஆன்மிக களஞ்சியம்

சிற்பக்கலையின் விந்தை-வரதராஜப் பெருமாள் கோவில்

Published On 2024-10-21 09:53 GMT   |   Update On 2024-10-21 09:53 GMT
  • இதற்குள் உள்ள சிறிய நன்கு தூண் கொண்ட மண்டபத்தையும் சேர்த்து நூறு கால் மண்டபம் என அழைக்கபடுகிறது.
  • இதன் நன்கு மூலைகளில் தொங்கும் கற்ச்சங்கிலிகள் சிற்பக்கலையின் விந்தையாகும்.

திருக்கச்சி அல்லது காஞ்சி வரதராஜப் பெருமாள் கோவில் என்பது பெருமாள் கோவில் என்று வைணவர்களால் போற்றப்படுகிறது.

வைணவ பாரம்பரியத்தில் திருவரங்கம் மற்றும் திருவேங்கடம் ஆகிய தலங்களுக்கு அடுத்ததாக முக்கியத்துவம் வாய்ந்த தலம்.

இது சென்னைக்கு அடுத்த காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள முப்பத்தோராவது திவ்ய தேசமாகும்.

வரலாறும் சிற்பக்கலையும்

இக்கோவில் எவரால் முதலில் நிறுவப்பட்டது என்பது தெரியவில்லை.

எனினும் கி பி 1053 இல் சோழகளால் வேழமலையில் குகைவரைக் கோவில் கிழக்கு மேற்கே விரிவாக்கப்பெற்றது என்று கல்வெட்டுகளின் மூலம் அறியபடுகிறது.

முதலாம் குலோத்துங்க சோழனும், விக்கிரம சோழனும் கோவிலை விரிவுபடுத்தினர்.

பதினான்காம் நூற்றாண்டில் தாயார் சன்னதியும், அபிஷேக மண்டபமும் அமைக்கப்பெற்றன.

சோழர்களின் வீழ்ச்சிக்குபின், விஜயநகர அரசர்கள் கிழக்கு கோபுரம், ஊஞ்சல் மண்டபம் மற்றும் கல்யாண மண்டபங்களை நிறுவினர்.

கல்யாண மண்டபம் எட்டு வரிசைகளில், வரிசைக்கு பன்னிரண்டு தூண்களாக 96 சிற்பகலை மிக்க ஒரே கல்லாளான தூண்கள் நிறைந்த மண்டபம் ஆகும்.

தூண்களில் யாளி, போர்குதிரை, குதிரை மீது வீரர்கள் மற்றும் பல்வகை சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன.

இதற்குள் உள்ள சிறிய நன்கு தூண் கொண்ட மண்டபத்தையும் சேர்த்து நூறு கால் மண்டபம் என அழைக்கபடுகிறது.

இதன் நன்கு மூலைகளில் தொங்கும் கற்ச்சங்கிலிகள் சிற்பக்கலையின் விந்தையாகும்.

கிழக்கு கோபுரம் ஒன்பது நிலைகளுடன் 180 அடி உயரமுடையது. தற்போது இக்கோபுரம் சிதிலமடைந்துள்ளது.

மூலவராகிய தேவராஜப் பெருமாள், வேழ மலை (அத்திகிரி) மீது நின்ற திருக்கோலத்தில் மேற்கே திருமுகமண்டலமுடன் நாற்கரத்துடன் அருள்பாலிக்கிறார்.

மூலவர் மலை மீது அமைந்துள்ளார் என்பதற்கு சான்றாக கர்ப்பகிரகத்தின் நேர் கீழே குன்று குடைவரை கோவிலில் யோக நரசிங்க பெருமாள் வீற்றுக்கிறார்.

பெருமாளை காண்பதற்கு இருப்பதிநான்கு படிகளை ஏறிச்செல்லும் போது காணப்படும் தங்க பல்லி மற்றும் வெள்ளி பல்லி, இக்கோவிலில் பிரசிதம்.

மூலவரை நோக்கிய படி தென்மேற்கே பெருந்தேவி தாயாருக்கு தனி சன்னதியும், திருக்குளத்தின் எதிரே சக்கரத்தாழ்வர் சன்னிதியும் உள்ளது.

Similar News