null
- குரு,சந்திரனால் ஏற்படும் சுப யோகங்களில் முக்கியமானது குரு சந்திர யோகமாகும்.
- சிலர் யோகம் என்றால் அதிர்ஷ்டம் என்று நினைத்துக் கொள்கின்றனர்.
ஜோதிட சாஸ்திரத்தில் யோகம் என்றால் கிரகச் சேர்க்கை என்று பொருள்.சாஸ்திரத்தில் ஆயிரக்கணக்கான யோகங்கள் சொல்லப்பட்டு இருந்தாலும் நடைமுறையில் சில யோகங்கள் மட்டுமே பலவிதமான பலன்களை தந்து கொண்டு இருக்கிறது. அதில் ஒன்று தான் குரு சந்திர யோகம்.
ஒரளவு ஜோதிட ஞானம் உள்ளவர்கள் ஒரு ஜாதகத்தை பார்த்தவுடன் ஜாதகத்தில் உள்ள சிறப்பான யோகம் பற்றி கூறுவார்கள்.ஆனால் ஜாதகர் அனுபவிக்கும் பலன்கள் முற்றிலும் மாறுபட்டு இருக்கும். சில ஜாதகத்தில் குறிப்பிட்டுச் சொல்லும்படி எந்த யோகமும் இருக்காது. ஆனால் அனுபவிக்கும் பலன்கள் பிரமாண்டமாக இருக்கும். இந்த முரண்பாட்டிற்கு என்ன தான் காரணம் என்பதை சற்று உள்ளாழ்ந்து உற்று நோக்கினால் இந்த புதிருக்கு விடை கிடைக்கும். இது போன்ற மாறுபட்ட பலனுக்கான காரணத்தை பார்க்கலாம்.
குரு,சந்திரனால் ஏற்படும் சுப யோகங்களில் முக்கியமானது குரு சந்திர யோகமாகும். ஜாதகத்தில் சந்திரன் இருக்கும் இடத்தில் குரு சேர்ந்திருந்தாலோ அல்லது குருவின் பார்வை பதியக்கூடிய 5, 7, 9 ஆகிய இடங்களில் சந்திரன் இருந்தாலோ குரு சந்திர யோகம் உண்டாகும். இந்த யோகம் இருக்கும் ஜாதகர்கள் நீண்ட ஆயுள், நீடித்த புகழ், அழியா செல்வம், செல்வாக்கு, காரிய சித்தி, சமுதாயத்தில் உயர்ந்த பதவி தேடி வரும்.
கெஜகேசரி யோகம்
சந்திரன் இருக்கும் இடத்தில் இருந்து 4,7,10-ம் இடங்களில் குரு இருந்தால் அது கெஜகேசரி யோகமாகும். எதிரிகளை சிங்கம் போல எதிர் கொண்டு அழிக்கக்கூடியவர்கள். தைரியமும், தன்னம்பிக்கையும் சொன்னதை செய்யக்கூடிய செயலாற்றல் மிக்கவர்களாக இருப்பார்கள். இதனால் பல யானைகளுக்கு மத்தியில் வாழும் ஒரு சிங்கம் போன்ற வலிமை உண்டாக்கும் வெற்றி தரும் யோகமாகும்.
சகடையோகம்
சந்திரனுக்கு 6,8-ல் குரு இருந்தால் உண்டாவது. இதனால் வாழ்வில் ஏற்றத் தாழ்வுள்ள பலன்களே உண்டாகும். வாழ்க்கை வண்டிச் சக்கரம் போல சாண் ஏறினால் முழம் சறுக்கும். ஏற்ற இறக்கம் மிகுதியாக இருக்கும். அதிர்ஷ்டம் அவ்வப்போது வந்தாலும் வெகு சீக்கிரம் மறைந்து விடும். இனம்புரியாத மனக்குழப்பம் இருந்து கொண்டே இருக்கும் என்பதால் நிலையான முன்னேற்ற வாழ்க்கை இருக்காது. ஜாதகத்தில் மற்ற சுபகிரகங்களின் அமைப்பு, பார்வையைப் பொருத்து பாதிப்புகள் குறைந்து நல்ல பலன்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
சகடையோகம்
சந்திரனுக்கு 6,8-ல் குரு இருந்தால் உண்டாவது. இதனால் வாழ்வில் ஏற்றத் தாழ்வுள்ள பலன்களே உண்டாகும். வாழ்க்கை வண்டிச் சக்கரம் போல சாண் ஏறினால் முழம் சறுக்கும். ஏற்ற இறக்கம் மிகுதியாக இருக்கும். அதிர்ஷ்டம் அவ்வப்போது வந்தாலும் வெகு சீக்கிரம் மறைந்து விடும். இனம்புரியாத மனக்குழப்பம் இருந்து கொண்டே இருக்கும் என்பதால் நிலையான முன்னேற்ற வாழ்க்கை இருக்காது. ஜாதகத்தில் மற்ற சுபகிரகங்களின் அமைப்பு, பார்வையைப் பொருத்து பாதிப்புகள் குறைந்து நல்ல பலன்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
குரு சந்திர யோகம் யாருக்கு வரம்?
குருவினால் உண்டாகும் யோகங்கள் பல இருந்தாலும் அனைவராலும் பேசப்படும் யோகம் குரு சந்திர யோகம். பொதுவாக யோகம் என்ற சொல்லுக்கு கிரகச் சேர்க்கை என்று பொருளாகும். சிலர் யோகம் என்றால் அதிர்ஷ்டம் என்று நினைத்துக் கொள்கின்றனர். குரு சந்திர யோக அமைப்பு உள்ள சிலர் யோகத்தையும் பலர் வாழ்க்கையில் தடுமாற்றத்தையும் சந்திப்பதை நடை முறையில் பார்க்கிறோம். அதாவது குருச் சந்திர யோகம் பலருக்கு அவயோகத்தையும் தருகிறது. சகடை யோகம் பலர் வாழ்வில் பெரிய திருப்பு முனையை தந்தும் உள்ளது.
ஜாதகத்தில் இருக்கும் யோகம் ஏன் வேலை செய்யவில்லை ஜோதிடத்தில் எந்த ஒருவிதியும் அனுபவப்பூர்வமாக ஒத்துவந்தால் மட்டுமே ஏற்க வேண்டும். குரு சந்திர யோகம் பலன் தர ஒரு ஜாதகத்தில் குருவும் சந்திரனும் சுபத்துவம் பெறுவது அவசியம். கிரகங்கள் எங்கே இருக்கிறது என்பதை விட எப்படி இருக்கிறது, என்ன ஆதிபத்தியம் பெறுகிறது என்பது மிக முக்கியம். இந்த அமைப்பில் சந்திரன் வளர்பிறைச் சந்திரனாக இருப்பது சிறப்பு. குரு ஆட்சி உச்சம் திக்பலம் போன்ற அமைப்புகளில் இருப்பது மேலும் சிறப்பு.குருவும், சந்திரனும் நீசம் பெறாமல் அசுப கிரக சம்பந்தம் பெறாமல் இருப்பது நல்லது. அத்துடன் அதாவது சந்திரனும் குருவும் ஒருவருக்கொருவர் கேந்திரங்களில் இருக்கும் கெஜகேசரியோகமும், குருச் சந்திர யோகமும் சில லக்னங்களுக்கு கெடுதலையே தருகிறது.
அதனால் யோகம் இல்லாத சாதாரண வாழ்க்கையே வாழுகிறார்கள். அதே போல் குருவும் சந்திரனும் 6,8 ஆக சகடை அமைப்புள்ள எத்தனையோ நபர்கள் வி.ஐ.பி.யாக நல்ல பொருளாதாரத்துடன் வலம் வருகிறார்கள்.ஒருவரின் பொருளாதாரம், யோகம், அதிர்ஷ்டம் போன்றவைகள் குருசந்திர யோகம், கெஜகேசரி யோகம் சகடை அமைப்புகளால் மட்டும் தீர்மானிக்கபடுவதில்லை. அதே போல ஒருவர் வாழ்க்கையின் வளர்ச்சியை லக்னம், லக்னாதிபதி மற்றும் பூர்வ புண்ணிய ஸ்தானம், பாக்கிய ஸ்தானம் அடுத்தடுத்த தசாபுக்திகளே தீர்மானிக்கின்றன. அதனால் இது அனுபவத்தில் ஏற்றுக் கொள்ள முடியாத விதியே.
எனவே குருச்சந்திர யோகம், சகடை மட்டுமே ஒருஜாதகத்தின் பலனை தீர்மானிக்காது. மேலும் லக்ன ரீதியாக குருவும் சந்திரனும் பெற்ற ஆதிபத்தியமே குரு சந்திரனால் ஏற்படும் யோகம், அவயோகத்தை தீர்மானிக்கிறது. அதன்படி 12 லக்னத்தில் குரு சந்திர யோகத்தால் மீன லக்னத்தினர் மட்டுமே ஆதிபத்திய ரீதியாக அற்புதமான உன்னத பலன்களை அனுபவிக்கிறார்கள். மீன லக்னத்திற்கு குரு லக்னாதிபதி, பத்தாம் அதிபதி. சந்திரன் பூர்வ புண்ணிய ஸ்தானாதிபதி. பிற லக்னத்திற்கு ஒரு ஆதிபத்திய ரீதியாக சுப பலன் நடந்தால் மற்றொரு ஆதிபத்திய ரீதியாக எதிர்வினை உண்டு.
இரு ஆதிபத்தியம் கொண்ட கிரகங்கள் அனைத்தும் ஒரு ஆதிபத்தியத்திற்கு சுப பலனை வழங்கினால் மற்றொரு ஆதிபத்திய ரீதியாக ஏதேனும் அசுப விளைவுகளைத் தராமல் போகாது.எத்தகைய கிரகச் சேர்க்கையாக இருந்தாலும் பொதுவாக யோகம், அவயோகம் என்று பொதுவாக பலன் சொல்லக் கூடாது. லக்ன ரீதியான ஆதிபத்தியம், நின்ற வீடு, நட்சத்திர சாரம் போன்றவற்றைப் பொறுத்து பலன்கள் மாறுபடும். மேலும் கர்மா ரீதியாக குருச் சந்திர யோகத்தை உற்று நோக்கினால் குரு கால புருஷ 9-ம் அதிபதி. தந்தை மற்றும் தந்தை வழி உறவுகள் பற்றிக் கூறுமிடம். சந்திரன் கால புருஷ 4-ம் அதிபதி தாய் பற்றிக் கூறுமிடம். ஆக தாய் மற்றும் தந்தை வழி உறவுகள் மூலம் ஏற்படும் கர்ம வினைப் பதிவின் தொடர்ச்சியே குரு சந்திரயோகம்.
பரிகாரம்:
பொருளாதாரத்தில் உன்னத நிலையை அடைய வியாழக்கிழமை கோவில் யானைக்கு கரும்பு, பழங்கள் இயன்ற உணவு தானம் வழங்கினால் மகத்தான வாழ்வு உண்டு. இவ்வளவு விரிவாக எடுத்துக் கூறியும் குரு சந்திர யோகம் இல்லாததால் வறுமை, கடன் இருப்பதாக நம்புபவர்கள் வியாழக்கிழமை காலை 11-12 மணி வரையான சந்திர ஓரையில் திருப்பதி வெங்கடாஜலபதியை தரிசிக்க வேண்டும். வியாழக்கிழமை மட்டும் பெருமாள் நம்மை காணும்படியான அலங்காரத்தில் இருப்பார். பெருமாளின் கண் திறந்து இருப்பது நேத்ர தரிசனம் என்று பெயர். அன்று பெருமாளை தரிசித்தால் பொருள் குற்றம் அகன்று நிம்மதியான வாழ்க்கை கிடைக்கும்.
ஆன்மிகம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்.... https://www.maalaimalar.com/devotional