தோஷ பரிகாரங்கள்

ஆடி மாதம் கோனியம்மனுக்கு செய்யும் அபிஷேகங்களும்... கிடைக்கும் பலன்களும்...

Published On 2023-07-29 05:34 GMT   |   Update On 2023-07-29 05:34 GMT
  • ஆடி மாதம் அம்மனை வழிபட உகந்த மாதமாகும்.
  • கோனியம்மனுக்கு அபிஷேகம் செய்தால் என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்று பார்க்கலாம்.

கோனியம்மனுக்கு அபிஷேகம் செய்தால் என்னென்ன பலன்கள் கிடைக்கும். அதன் விவரம் வருமாறு:-

சந்தன தைலம்- சுகம் தரும்

திருமஞ்சனம்- சம்பத்து நல்கும்

பாசிப்பயறு மாவு- மகிழ்ச்சியாய் வாழலாம்

அரிசி மாவு - உயர்பதவி அடையலாம்

நெல்லிப்பொடி - சாந்தி உண்டாகும்

வில்வப்பொடி - யோகம் அளிக்கும்

பஞ்சாமிர்தம் - கல்வி அறிவு பெருகும்

பால் - மனக்கவலை தீரும்

தயிர் - மனநோய் அகலும்

தண்ணீர்- சாந்தி உண்டாகும்

நெய் - தொழில் சிறக்கும்

தேன் - குரல் இனிமை பெறும்

வெல்லம் - துக்க நிவர்த்தி அளிக்கும்

கரும்புச்சாறு - மன அமைதிபெறும்

இளநீர் - பக்தி பெருகும்

எலுமிச்சம்பழம் - விதியை வெல்லலாம்

சாதம் - சகல பாக்கியம் உண்டாகும்

திருநீறு - துன்பம் நீங்கும்

சந்தனம் - நிலம் வீடு வாங்கலாம்

நல்லெண்ணெய் - ஐயம் நீங்கும்

பழவகை - திருவருள் பெறலாம்

வாழைப்பழம் - வறுமை ஒழியும்

கரும்புச் சர்க்கரை - குழந்தைபேறு கிட்டும்

எள் - சனி பயம் நீங்கும்

மாம்பழம்- வெற்றியை கொடுக்கும்

பூ மாலை- உடல் பிணி தீரும்

பரிவட்டம்- பெருஞ்செல்வம் பெருகும்

பச்சரிசி- தீராக்கடன் தீரும்

மஞ்சள் தூள் - விபத்துகள் தவிர்க்கலாம்

தேங்காய்- பொன்பொருள் சேரும்

பேரிச்சம்பழம்- கடல் கடந்து செல்லலாம்

கல்கண்டு- வாகனம் வாங்கலாம்.

முந்திரி- பிரிந்தவர் ஒன்று சேரலாம்

ஏலம்- தீமைகள் நீங்கும்

உலர் திராட்சை- சங்கடங்கள் தீரும்

எள்ளுமாவு- மரணபயம் நீங்கும்

எள்ளுருண்டை- அரசு வேலை பெறலாம்

எள்ளு சாதம் - பகை நீங்கும்

பன்னீர் - நன்னடத்தை உண்டாகும்

கும்ப ஜலம்- சாந்தி உண்டாகும்

Tags:    

Similar News