பித்ரு தோஷங்கள் உள்பட 16 வகையான தோஷங்களும் நீக்கும் பரிகாரம்
- திருமணம் மற்றும் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
- தான தர்மங்களைச் செய்தால் பிரம்மஹத்தி தோஷம் நீங்கும்.
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள நீடாமங்கலத்தில் ஸ்ரீ காசிவிஸ்வநாதர் கோவில் உள்ளது. இந்த கோவில் அருகில், திருமாலுக்கும் ஆலயம் இருக்கிறது.
வருடந்தோறும் இங்கே விழாக்களும் விசேஷங்களும் நடத்தப்படுகிறது என்றாலும் வைகாசி மாதத்தில் பிரம்மோற்சவம் விமரிசையாக நடத்தப்படுகிறது.
தினமும் ஒவ்வொரு வாகனத்தில் சுவாமியும் அம்பாளும் திருவீதியுலா, சிறப்பு அபிஷேகம், விசேஷ அலங்காரம் என அமர்க்களப்படும். நிறைவில், தீர்த்தவாரியின் போது சுற்றுவட்டார ஊர்க்காரர்கள் அனைவரும் நீடாமங்கலம் சிவாலயத்தில் ஒன்று திரண்டிருப்பார்கள். காசிக்கு நிகரான இந்தத் தலத்துக்கு சென்று பிரார்த்தனை செய்தால் பித்ரு தோஷங்கள் உள்பட 16 வகையான சாபங்களும் தோஷங்களும் விலகும், திருமணம் மற்றும் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
வைகாசி மாதம் பவுர்ணமியும் விசாக நட்சத்திரமும் கூடிய உச்சி வேளையில் அறுக்கு இலையும் அரிசியும் தலையில் வைத்துக்கொண்டு உத்திரகோச மங்கை தலத்தில் உள்ள பிரம்ம தீர்த்தத்தில் நீராட வேண்டும். பின் ஆலயத்தின் உட்புறத்திலுள்ள அக்னி தீர்த்தத்தில் எள், அருகு, கோமயம் இவற்றைச் சிரசில் தெளித்துக்கொண்டு நீராடி கருவறையில் குடி கொண்டு இருக்கும் மங்களநாதனுக்கு அபிஷேக அர்ச்சனை செய்து, பின் தான தர்மங்களைச் செய்தால் பிரம்மஹத்தி தோஷம் நீங்கும்.