தோஷ பரிகாரங்கள்

திருஷ்டி கழிக்க சரியான நேரம் எது?

Published On 2023-06-11 05:35 GMT   |   Update On 2023-06-11 05:35 GMT
  • திருஷ்டி தோஷத்தைப் போக்க, பல வழிமுறைகள் உள்ளன.
  • பசுவின் பாத மண்ணுக்கு மிகுந்த சக்தி உண்டு.

வீட்டில் தீய சக்திகள் அதாவது எதிர்மறை ஆற்றல்கள் இருப்பின் அவற்றையே திருஷ்டி என்கிறார்கள். இவ்வாறு ஏற்படும் திருஷ்டி தோஷத்தைப் போக்க, பல வழிமுறைகளையும் சொல்கின்றனர். திருஷ்டி கழிக்க செய்யப்படும் விஷயங்களால் பல நச்சுக்களும் வெளியேறுவதாக அறியப்படுகிறது

* அமாவாசை, பௌர்ணமி நாட்களில் உச்சி வேளையில் வீட்டிற்கு திருஷ்டி கழிக்க வேண்டும். அவ்வாறு செய்ய முடியாதவர்கள் காலை 6.00 மணி அல்லது மாலை 6.00 மணிக்குத் திருஷ்டி கழிக்கலாம்.

* வீட்டின் எல்லாப் பகுதிகளிலும் வேப்பிலை கொண்டு மஞ்சள்நீர் தெளிக்க வேண்டும். வேப்பிலை என்பது மிகச்சிறந்த கிருமி நாசினியாகும்.

* கடல் தண்ணீரை சிறிது எடுத்து, ஒரு பக்கெட் தண்ணீரில் ஊற்றி வீட்டை கழுவி விட்டாலோ அல்லது துடைத்து விட்டாலோ தோஷங்கள் போகும்.

* ஆகாச கருடன் கிழங்கு வாங்கி அதில் மஞ்சள், சந்தனம், குங்குமம் வைத்து கருப்பு கம்பளி கயிற்றில் கட்டி வீட்டின் வாசலில் தொங்க விடுவதும் உண்டு. பல நச்சுக்களை அகற்றும் தன்மை மஞ்சளிற்கு உண்டு

* வளர்பிறையில் வரும் செவ்வாய், சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் கடற்கரைக்குச் சென்று கடல் நீரை எடுத்து வந்து அதில் மஞ்சள் பொடியை கலந்து கடை, அலுவலகம், வீடு ஆகியவற்றில் தெளிப்பது சிறந்த பரிகாரம் ஆகும்.

* அமாவாசை, பவுர்ணமி, அஷ்டமி, நவமி போன்ற நாட்களில் காலை, மாலை இருவேளையும் சாம்பிராணி பொடியுடன், கருவேலம்பட்டை பொடி, வெண் கடுகுத்தூள் ஆகியவற்றை கலந்து வீடு, கடை அலுவலகத்தில் தூப, தீப, புகை காட்ட திருஷ்டியும், தீய சக்திகளும் வெளியேறும் என்பது நம்பிக்கை.

* பசுவின் பாத மண்ணுக்கு மிகுந்த சக்தி உண்டு. வீட்டில் ஆறு மாதத்திற்கு இருக்கும் கிரக தோஷங்கள் விலகும். ஒருமுறையாவது பசுவை இல்லத்திற்கு அழைத்து வந்து கோபூஜை செய்தால் அந்த இல்லத்தில் இருக்கும் கிரக தோஷம் விலகும்.

Tags:    

Similar News