முக்கிய விரதங்கள்
புத்தர்

புத்த பூர்ணிமா விரத பூஜை பலன்கள்

Published On 2022-05-16 04:17 GMT   |   Update On 2022-05-16 04:17 GMT
உலகம் முழுவதும் பௌத்த மதத்தைப் பின்பற்றும் பௌத்தர்கள் இந்த புத்த பூர்ணிமா தினத்தில், விரதம் இருந்து புத்தரை வழிபாடு செய்து வேண்டிக் கொள்கின்றனர்.
புத்தருக்கு ஞானம் கிடைத்த நாளே இந்த புத்த பூர்ணிமா என்று கூறப்படுகிறது. தற்போது இந்த பண்டிகை புத்தரின் 2584-ஆவது பிறந்த நாள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு நேற்று (மே 15) 12.45க்கு புத்த பூர்ணிமா திதி தொடங்கியது. இது இன்று (மே 16) காலை 9.43 வரை நீடிக்கும் எனக் கூறப்படுகிறது. கௌதம புத்தரின் பிறந்தநாள் புத்த பூர்ணிமா எனக் கொண்டாடப்படுகிறது.

உலகம் முழுவதும் பௌத்த மதத்தைப் பின்பற்றும் பௌத்தர்கள் இந்த புத்த பூர்ணிமா தினத்தில், விரதம் இருந்து புத்தரை வழிபாடு செய்து வேண்டிக் கொள்கின்றனர். புத்தர் கோயிலுக்குச் சென்று வேண்டுதல் செய்பவர்கள் மற்றவர்களுக்குப் பல பொருட்களைத் தானமாக வழங்குகின்றனர். விரதம் ஏற்றுத் தியானம் இருந்து தங்களது வழிபாடுகளைச் செய்கின்றனர்.

பௌத்த மதத்தைப் பின்பற்றுபவர்களுக்குப் பீகார் மாநிலத்தில் உள்ள கயா என்ற இடம் வழிபாடு செய்ய முக்கிய ஸ்தலமாக உள்ளது. அதுமட்டுமல்லாமல் உலகத்தில் பல முக்கியமான இடங்களும் உள்ளது.

இந்த புத்த கயா என்னும் இடத்தில் தான் புத்தருக்கு ஞானம் கிடைத்ததாகவும் இன்றுவரை நம்பப்படுகிறது. அவரது பிறப்பிலிருந்து இறப்பு வரை எல்லாம் இந்த புத்த பூர்ணிமாவில் நிகழ்ந்ததாகப் பௌத்தர்கள் அனைவரும் நம்புகின்றனர். அதனால் இந்த நாள் மிகவும் சிறப்புப் பெற்ற நாளாக அவர்களால் கொண்டாடப்படுகிறது.

புத்தர் அவதரித்த வைகாசி மாதம் பெளர்ணமி தினத்தை புத்த பூர்ணிமா, புத்த ஜெயந்தி அல்லது விசாக் என பல பெயரில் அழைக்கப்படுகிறது. இந்த புனித நாளில் விரதம் இருந்து மகாவிஷ்ணு வழிபாடு, எமதர்மன், சந்திர வழிபாடு செய்வது விசேஷமாக பார்க்கப்படுகிறது.

வைகாசி பெளர்ணமி நாளில், கங்கை போன்ற புனித நதி நீரை நீங்கள் குளிக்கும் நீரில் இரண்டு சொட்டாவது சேர்ந்து குளிக்கவும். வீட்டையும், பூஜை அறையையும் சுத்தம் செய்யவும். விளக்கேற்றி வழிபடவும். குறிப்பாக வீட்டில் இருக்கும் துளசி செடிக்கு தீப தூபம் காண்பித்து வழிபடவும்.

வைசாக பூர்ணிமா தினத்தன்று விரதம் அனுஷ்டிப்பதன் மூலம், விஷ்ணு மற்றும் யமராஜாவிடம் இருந்து தெய்வீக வரம் பெறலாம் மற்றும் கோர மரண பயத்திலிருந்து விடுபடலாம்.

வைசாக பூர்ணிமா நாளில் விஷ்ணு மற்றும் சந்திரனை வழிபட்டால் பண நெருக்கடிகள் நீங்கும். மனநோய்களிலிருந்து விடுபடுவதோடு, தன்னம்பிக்கையும் அதிகரிக்கிறது. சாதனை, புகழ், கௌரவம் கூடும்.

Similar News