இன்று ஆனி அமாவாசை... சனிக்கிழமை...முன்னோர்களை விரதம் இருந்து வழிபட்டால்...
- அமாவாசையும் சனிக்கிழமையும் இணைந்து வரும் நாள் மகத்துவமானது.
- நான்கு பேருக்கேனும் உணவுப் பொட்டலம் வழங்குங்கள்.
இன்று ஆனி அமாவாசையும் சனிக்கிழமையும் இணைந்து வருகிறது. மறக்காமல், விரதம் இருந்து முன்னோர் வழிபாட்டைச் செய்வோம். பித்ருக்கள் குளிர்ந்து ஆசீர்வதிப்பார்கள். இன்று 17.6.2020 சனிக்கிழமை அமாவாசை. ஆனி அமாவாசை.
வருடத்துக்கு மொத்தம் 96 தர்ப்பணங்கள் உள்ளன என்கிறது சாஸ்திரம். தமிழ் மாதப் பிறப்பு, அமாவாசை, மகாளய பட்ச காலம், கிரகண காலம் என்று மொத்தம் 96 தர்ப்பணங்களைச் செய்ய வலியுறுத்துகிறார்கள்.
மனித வாழ்க்கையில், ஒவ்வொருவருக்கும் குலதெய்வ வழிபாடும் பித்ரு வழிபாடும் மிக மிக அவசியம். நம்முடைய தலையாயக் கடமை. அமாவாசை முதலான நாட்கள், முன்னோர் ஆராதனைக்கு உரிய நாட்கள். பித்ருக்கள் ஆசீர்வாதம் நமக்குப் பரிபூரணமாகக் கிடைக்கின்ற தருணம்.
எனவே எதைச் செய்யாவிட்டாலும் முன்னோர் ஆராதனையை, வழிபாட்டை, வேண்டுதலைச் செய்யவேண்டும். இதனால், நம் குடும்பமும் நம் சந்ததியும் சீரும் சிறப்புமாக வளரும்; நிம்மதியும் சந்தோஷமுமாக இனிதே வாழலாம்.
இன்று 17-ம் தேதி, அமாவாசை. ஆனி மாத அமாவாசை. சனிக்கிழமையும் கூட. அமாவாசையும் சனிக்கிழமையும் இணைந்து வரும் நாள், இன்னும் மகத்துவமானது. எனவே, அமாவாசை தினமான இன்று விரதம் இருந்து பித்ரு தர்ப்பணம் செய்யவேண்டும்.
இன்று முன்னோரின் படங்களை சுத்தப்படுத்தி, பூக்களால் அலங்கரிப்போம். முன்னதாக, வீட்டைச் சுத்தம் செய்யுங்கள். தர்ப்பணமோ வேறு என்ன முறையோ அதன்படி, உங்கள் குடும்ப வழக்கப்படி முன்னோரை வணங்குங்கள்.
முக்கியமாக, காகத்துக்கு உணவிடுங்கள். குறிப்பாக, எள் கலந்த சாதம் வழங்குங்கள். உங்களால் முடிந்த அளவுக்கு நான்குபேருக்கேனும் உணவுப் பொட்டலம் வழங்குங்கள். இதில் குளிர்ந்து போய், உங்கள் வீட்டையே சுபிட்சமாக்கி அருள்வார்கள் முன்னோர்கள்.
குடும்பத்தில் ஒற்றுமை மேலோங்கும். குழந்தைகள் இன்னும் இன்னும் சிறப்புடனும் செழிப்புடனும் வளர்வார்கள்.
இன்று 17-ம் தேதி, சனிக்கிழமை, ஆனி அமாவாசை.