முக்கிய விரதங்கள்

அமுக்தாபரண சப்தமி விரதமும்... பலன்களும்...

Published On 2022-09-03 01:42 GMT   |   Update On 2022-09-03 01:42 GMT
  • இன்று அமுக்தாபரண சப்தமி தினமாகும்.
  • பூஜிக்கப்பட்ட ரக்சை கயிற்றை பெண் கையில் கட்டிக் கொள்ள வேண்டும்.

ஆவணி மாதம் வளர்பிறை சப்தமி திதிக்கு அமுக்தாபரண சப்தமி என்று பெயர். இந்த தினத்தில் பெண்கள் செய்யும் பூஜை வழிபாடுகளுக்கு அதிக சக்தி உண்டு. இன்று அமுக்தாபரண சப்தமி தினமாகும்.

இன்று திருமணமான சுமங்கலிப்பெண்கள் காலை சுமார் 10 மணிக்கு மேல் குளித்து புதிய துணியில் ஐந்து வித வர்ணங்களால் வரையப்பட்ட-எழுதப்பட்ட- அச்சிடப்பட்ட பார்வதியுடன் சேர்ந்த பரமேஸ்வரன் படத்தில், ஆவாஹனம் செய்து முறையாக பூஜை செய்ய வேண்டும்.

பூஜை முடிவில் ஏழு முடிச்சுகள் போடப்பட்ட கயிற்றை பூஜையில் வைத்து பூஜிக்கப்பட்ட ரக்சை கயிற்றை பெண் தனது இடது கையில் கட்டிக் கொள்ள வேண்டும்.

இதனால் பல காலமாக சந்ததி இல்லாமல் இருக்கும் பெண்ணிற்கு சிவன் அருளால் குழந்தைச் செல்வம் ஏற்படும். மேலும் பெண்கள் தாங்கள் அணிந்திருக்கும் மாங்கல்யம், தோடு, வளையல், மெட்டி, ஒட்டியானம், மூக்குத்தி போன்ற மங்களமான ஆபரணங்களை விட்டு என்றும் பிரிய நேராது. இந்த பூஜையால் பெண்கள் சுமங்கலியாகவே வாழும் பாக்கியம் கிட்டும் என்கிறது பவிஷ்ய புராணம்.

Tags:    

Similar News