இந்த விரதம் அனுஷ்டித்தால் 16 வகை சம்பத்துகளும் கிட்டும் ...
- சாப்பிடாமல் இறைவனை எண்ணி இருப்பது தான் விரதம் என்று பெயர்.
- முருகன் கோவிலுக்கு சென்று வழிபட்டு வர வேண்டும்.
பெரும்பாலும் குழந்தை வரம் பெற சஷ்டி விரதம் இருப்பது நல்லது என கூறுவர். ஆனால் அப்படி இல்லை பல்வேறு செல்வங்களை அள்ளித்தர வல்ல முருகப்பெருமானை சரணடைவதற்கு இந்த விரதம் ஏற்றது.
குழந்தை வரம், நல்ல வேலை கிடைக்க வேண்டும், வியாபாரம் செழிக்க வேண்டும், நல்ல வரன் அமைய வேண்டும், ஆரோக்கியம் கிடைக்க வேண்டும் போன்ற 16 சம்பத்துகளையும் வேண்டி இந்த விரதம் இருக்கலாம்.
நம்பிக்கையோடு முருகப்பெருமானை எண்ணி விரதம் இருந்தால், குழந்தை வரம் மட்டுமல்லாமல், அனைத்து வகை செல்வங்களையும் முருகப்பெருமான் நமக்கு அருளச்செய்வார்.
சஷ்டி விரதம் இருப்பது எப்படி?
பெரும்பாலும் சஷ்டி விரதம் இருப்பவர்கள் திருச்செந்தூரில் கோவிலிலேயே தங்கி விரதம் மேற்கொள்வது வழக்கம். இவர்கள் தினமும் காலையில் கடலில் குளித்து, பின்னர் அங்குள்ள நாழி கிணற்றிலும் குளித்து முருகப்பெருமானை தரிசித்து விரதத்தை தொடங்க வேண்டும். நெய் விளக்கேற்றி வழிபடலாம் கோவிலில் சென்று விரதம் இருக்க முடியாதவர்கள், வீட்டிலேயே விரதம் இருக்கலாம்.
சாப்பிடாமல் இறைவனை எண்ணி இருப்பது தான் விரதம் என்று பெயர். அப்படி சாப்பிடாமல் இருக்க முடியாதவர்கள் கோவிலில் கொடுக்கப்படும் பால், பழம் சாப்பிடலாம். தேன், திணைமாவு என கொடுக்கும் பிரசாதத்தை வாங்கி சாப்பிடலாம். காலை மற்றும் மாலையில் வீட்டின் அருகில் உள்ள முருகன் கோவிலுக்கு சென்று வழிபட்டு வர வேண்டும்.
வீட்டின் அருகில் முருகன் கோவில் இல்லை அல்லது வெளிநாட்டில் இருக்கின்றீர்கள் என்றால் வீட்டிலேயே முருகனின் புகைப்படம், சிலையை வைத்து நெய் விளக்கு ஏற்றி வணங்கி விரதத்தை மேற்கொள்ளலாம்.