முக்கிய விரதங்கள்
நம் மனதை குளிர்விக்க வைக்கும் வைகுண்ட ஏகாதசி விரதம்
- வைகுண்ட கதவுகள் திறக்கும் நாளாகும்.
- பெருமாளை விரதம் இருந்து வழிபட உகந்த நாள்.
இந்துக்களின் மிக முக்கிய விசேஷங்கள், பண்டிகைகளில் ஒன்று தான் வைகுண்ட ஏகாதசி. இந்த முக்கிய நிகழ்வு மார்கழி மாதத்தில் நடைபெறுகிறது. நம் மனதை குளிர்விக்க வைக்கும் விரதம் தான் வைகுண்ட ஏகாதசி விரதம்.
இறைவனை சரணடையும், நல்லவர்களுக்கு வைகுண்ட பதவி கொடுப்பதற்காக வைகுண்ட கதவுகள் திறக்கும் நாளாகும். மார்கழி மாதத்தில் வரும் வளர்பிறை பதினொன்றாம் நாள், 'வைகுண்ட ஏகாதசி' என இந்துக்களால் மிக சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அந்த அற்புத திருநாள் கோலாகலமாக நடைபெறுகிறது.
பகல் பத்து, இரா பத்து என இருபது நாள் திருவிழாவாகவும், பகல் பத்து முடியும் பத்தாம் நாள் வைகுண்ட ஏகாதசி என கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.