வழிபாடு

12 ஜோதிர்லிங்கங்கள் அமைந்துள்ள திருத்தலங்களும்... வழிபட்டால் கிடைக்கும் பலன்களும்...

Published On 2022-06-23 08:35 GMT   |   Update On 2022-06-23 08:35 GMT
  • சிவனை வணங்குவதற்குரிய வடிவங்களுள், ஜோதிர்லிங்கங்கள் சிறப்பு வாய்ந்தவையாக கருதப்படுகின்றன.
  • இந்தியாவில் 12 ஜோதிர்லிங்க திருத்தலங்கள் உள்ளன. அவை...

1 அருள்மிகு ராமநாதர் திருக்கோவில், ராமேஸ்வரம்

கங்கை நீரை கொண்டுவந்து அபிஷேகிப்பது வழக்கம். இங்குமட்டும் கடலில் எந்நாளும் என்நேரமும், நீராடலாம். ஆஞ்சநேயர்கொண்டு வந்த லிங்கத்திற்கும், சீதை மணலால் செய்த லிங்கத்திற்கும் ராமர்பூஜை செய்தது சிறப்பு.

2 அருள்மிகு மல்லிகார்ஜுனேஸ்வரர் திருக்கோவில், ஸ்ரீசைலம்.

ஆந்திரா - கர்நூல்மாவட்டம் நந்தியாவிலிருந்து 70 கி.மீ.

நந்தியே மலையாக சிவனை தாங்குகிறார். விநாயகர் சித்திபுத்தியரை மணந்த தலம்.

3 அருள்மிகு பீமசங்கரர் திருக்கோவில், பீமசங்கரம்,

மஹாராஷ்டிரம் புனாவிலிருந்து 140கி.மீ.

கருவறைக்கு முன் நந்திக்கு பதில் ஆமை. அவசரப்படாமல் வழிபடவேண்டும் என்பதை உணர்த்துவதற்காக.

4 அருள்மிகு திரியம்பகேஸ்வரர்திருக்கோவில், திரியம்பகம்.

மஹாராஷ்டிரம். நாசிக்கிலிருந்து 29கி.மீ.

சுயம்பு லிங்கம். லிங்கக்கருவறையில் எப்பொழுதும் நீர்ஊறுகிறது. சிவனே மலையாக இருப்பதாக தலம், கோதாவரி உற்பத்திக்கும் ஸ்நானம்.

5 அருள்மிகு குஸ்ருணேஸ்வரர்திருக்கோவில், குஸ்ருணேஸ்வரம்

(வேரூன்) மஹாராஷ்டிரம் எல்லோரா அருகே.

அம்பிகை குங்குமப்பூவால் வழிபட்ட தலம். (குஸ்ருணம்-குங்குமம்) கருவறையின் சுவற்றில் அன்னையின் திருவுருவம் உள்ளது.

6 அருள்மிகு சோமநாதர்திருக்கோவில், ப்ராபாச பட்டினம்(விராவெல்) குஜராத்

கடற்கரை தலம். சந்திரன்சாபம் தீர்த்த தலம். அமாவாசைகூடிய திங்கட்கிழமை தரிசனம் மிகவும் சிறப்பு. மிகச்சிறிய சுயம்புமூர்த்தி.

7 அருள்மிகு நாகநாதர் திருக்கோவில், ஓனண்டா.குஜராத்

தெற்கு நோக்கிய லிங்கம்.நாமதேவர் வணங்குவதற்காகத் திரும்பிய கோலம்.

8 அருள்மிகு ஓம்காரேஷ்வரர்(அமலேஸ்வரர்) திருக்கோவில், ஓங்காரம், மத்திய பிரதேசம் உஜ்ஜயினிலிருந்து 281 கி.மீ.

மலைமுகட்டில் சுயம்புலிங்கம். பாணாசுரன் ஒவ்வொரு நாளும் 2000 லிங்கங்களை

பூஜித்து நர்மதை நதியில் விடப்பட்டவையே சாளக்கிராமங்களாக மாறியதாக வரலாறு.

9 அருள்மிகு மஹாகாளர்திருக்கோவில், உஜ்ஜயினி(அவந்தி).மத்திய பிரதேசம்

கார்த்திகை பவுர்ணமி தரிசனம் விசேஷம். 5 அடுக்கு கோவில். தோல் வியாதிகளை நீக்கும் கோடித் தீர்த்தம்.

10 அருள்மிகு வைத்தியநாதர் திருக்கோவில், சித்த பூமி (தேங்கர்)பீகார்

பல மாநிலங்களில் வைத்தியநாதம் இருப்பதாகக் கூறினாலும் சிவபுராணத்தில்

குறிப்பிட்டுள்ளது இதுவே. திருமாலின் லீலையால் ராவணன் கொண்டு வந்த லிங்கம் தங்கி விட்டதலம்.

11 அருள்மிகு விஸ்வநாதர் திருக்கோவில், காசி(வாரணாசி). உத்திரப்பிரதேசம்

இங்கு இறப்பவருக்கு ஈசனேதாரக மந்திரம் ஓதுகிறார். தாங்களேஅபிஷேகம் செய்யலாம். சிவராத்திரிதரிசனம் விஷேசம். ராமேஸ்வரத்திலிருந்து கொண்டு வந்தமணலை த்ரிவேணியில் கரைப்பதுவழக்கம்.

12 அருள்மிகு கேதாரேஸ்வரர்திருக்கோவில், கேதார்நாத். உத்திரப்பிரதேசம்

இமயமலையில் சுயம்புபனிலிங்கம். அம்மன் ஈசனின் இடப்பாகம் பெற்ற தலம். 6 மாதமானிட பூஜை. 6 மாதம் தேவ பூஜை

Tags:    

Similar News