தமிழ் புத்தாண்டையொட்டி மணக்குள விநாயகருக்கு அமெரிக்க வைர கிரீட அலங்காரம்
- பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.
- பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
தமிழ் புத்தாண்டான சோபகிருது ஆண்டு இன்று பிறந்தது.
புதுவையில் பிரசித்தி பெற்ற மணக்குள விநாயகர் கோவிலில் தமிழ் புத்தாண்டையொட்டி இன்று சிறப்பு பூஜைகள் நடந்தது.
காலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு மணக்குள விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. தொடர்ந்து அமெரிக்க வைரம் பொருத்தப்பட்ட கிரீடம், தங்க கவசம் மணக்குள விநாயகருக்கு அணிவிக்கப்பட்டது.
பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
இதேபோல தமிழ் புத்தாண்டை முன்னிட்டு காந்தி வீதியில் உள்ள வேதபுரீஸ்வரர், வரதராஜ பெருமாள், ரெயில் நிலையம் எதிரே உள்ள கவுசிக பாலசுப்பிரமணியர், முத்தியால்பேட்டை தென்கலை சீனிவாச பெருமாள், முத்தியால்பேட்டை வன்னிய பெருமாள், வில்லியனூர் திருக்காமீஸ்வரர், திருக்காஞ்சி கங்கைவராக நதீஸ்வரர், காசி விஸ்வநாதர் உள்ளிட்ட அனைத்து கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடந்தது.
பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனர்.