வழிபாடு
- கோவன்புத்தூரின் காவல் தெய்வமாக அமைந்த சக்திதான் கோனியம்மன்.
- கோனி எனில் அரசர்கரசி அல்லது அரசிக்கரசி எனவும் பொருள் கொள்ளலாம்.
கோவன்புத்தூரின் காவல் தெய்வமாக அமைந்த சக்திதான் கோனியம்மன். கோனி அம்மன் என்றால் அரசர்களால் வழிபடப்படும் தெய்வம் எனவும் தெய்வங்களுக்கு எல்லாம் அரசி எனவும் பொருள்படும். தமிழில் கோ என்றால் மன்னர் மன்னர் என்றும் வடமொழியில் ராஜாதிராஜன் எனவும் கூறுவர். இவ்வாறு கோன் திரியும்போது கோனி எனில் அரசர்கரசி அல்லது அரசிக்கரசி எனவும் பொருள் கொள்ளலாம்.
கோவையைப் போலிதழ் வாயினைக் கொண்ட குலப்பிடிபூக்
கோவையைப் பூண்டருள் கோமதி ஸ்ரீமதி குண்டலியென்
கோவையைப் பூணணி கொற்றவை நற்றவர் கூட்டுறவால்
கோவையைக் காத்தருள் கோமகளாகிய கோனம்மையே
சீர்வளரும் கல்வியோடு செல்வநிறை ஆயுள்புகழ்
ஏர்வளரும் மக்கட்பே றெய்துங்கான் - பார்மிசை நல்
வாழ்வு வரும் வன்கோவைக் கோனியம்மன்மாணடிகள்
தாழ்ந்து தொழும் அன்பர்க்கே தான்