வழிபாடு
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் 108 மாவிளக்கு பூஜை
- மூலஸ்தான தீபாராதனை நடந்தது.
- பெண்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் மாசி மாத கடைசி வெள்ளிகிழமையை முன்னிட்டு 108 மாவிளக்கு பூஜை நடைபெற்றது.
இதை முன்னிட்டு காலை 6 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 8 மணிக்கு காலசந்தி பூஜை, பகல் 12 மணிக்கு உச்சிகால பூஜை, மாலை 5.30 மணிக்கு சாயரட்சை பூஜை நடந்தது. இரவு 7.30 மணிக்கு 108 மாவிளக்கு பூஜை நடைபெற்றது. பின்னர் மூலஸ்தான தீபாராதனை நடந்தது.
இதில் குலசேகரன்பட்டினம் சுற்றுவட்டார பெண்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.