விரிஞ்சிபுரம் மார்க்கபந்தீஸ்வரர் கோவிலில் பங்குனி பிரம்மோற்சவ விழா 26-ந்தேதி தொடங்குகிறது
- 26-ந்தேதி முதல் ஏப்ரல் 7-ம் தேதி வரை பிரம்மோற்சவ விழா நடக்கிறது.
- தேரோட்டம் ஏப்ரல் 2-ந் தேதி நடக்கிறது.
விரிஞ்சிபுரம் மார்க்கபந்தீஸ்வரர் கோவிலில் வருகிற 26-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) முதல் ஏப்ரல் 7-ம் தேதி வரை பிரம்மோற்சவ விழா நடக்கிறது. முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் ஏப்ரல் 2-ந் தேதி நடக்கிறது.
இதனையொட்டி நேற்று கோவில் அலுவலக வளாகத்தில் ஆலோசனை கூட்டம் நடந்தது. நிகழ்ச்சிக்கு வேலூர் மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் கவிதா தலைமை தாங்கினார். அணைக்கட்டு தாசில்தார் ரமேஷ், துணை தாசில்தார்கள் சுதா, குமார், ராமலிங்கம். ஊராட்சி மன்ற தலைவர் குணசுந்தரி பாலு உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். செயல் அலுவலர் ஸ்ரீதரன் வரவேற்றார். கூட்டத்தில் வியாபாரிகள் தொழிலதிபர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தேர் செல்லும் கிழக்குத் தேரோடும் வீதி, வடக்கு தேரோடும் வீதி, ஆகிய சிமெண்டு சாலைகளில் உள்ள மேடு பள்ளங்களை சீரமைக்க வேண்டும். இரு புறமுள்ள மரங்களின் கிளைகளை வெட்டி தேர் செல்வதற்கு இடையூறு இல்லாமல் பணிகளை முடிக்க வேண்டும். தேர் காலை 9 மணி புறப்பட்டு தேர் நிலை நிறுத்தும் செய்யும் வரை தீயணைப்பு வீரர்கள் உடனிருந்து பாதுகாப்பு செய்து கொடுக்க வேண்டும், மருத்துவ வசதிகள், 108 ஆம்புலன்ஸ் தயார் நிலையில் இருக்க வேண்டும். பஞ்ச மூர்த்திகள் வீதி உலா செல்லும்போது இடையூறாக உள்ள மின் கம்பிகளை அப்புறப்படுத்தி கொடுத்தல் மற்றும் மின்வாரிய பணியாளர்கள் தினசரி சுவாமி வீதி உலாவின் போது உடனிருந்து மின் பாதுகாப்பு வழங்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டது,.
ஏற்பாடுகளை இந்து சமய அறநிலைத்துறை இணை ஆணையர் சி.நித்யா ஆய்வாளர் சுரேஷ்குமார், கோயில் செயல் அலுவலர் கோ ஸ்ரீதரன், மற்றும் வணிகர்கள் வியாபாரிகள் செய்து வருகின்றனர்.